News May 29, 2024

மோடி மறைமுக பரப்புரையில் ஈடுபடுகிறார்: காங்கிரஸ்

image

பிரதமரின் கன்னியாகுமரி தியான நிகழ்ச்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமரின் மறைமுக பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும், நிகழ்ச்சிக்கு தடை கோரி திமுக புகார் அளித்துள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் மே 31 முதல் 2 நாள்களுக்கு இரவு பகலாக மோடி தியானம் செய்ய உள்ளார்.

News May 29, 2024

நடப்பு ஆண்டில் சென்னையில் அதிகபட்ச வெயில்

image

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளதால் மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. நடப்பு ஆண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெயில் இதுவாகும். நுங்கம்பாக்கம் 105, மதுரை 104, வேலூர், நாகை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

News May 29, 2024

ஜெயக்குமார் வழக்கில் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை?

image

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் சபாநாயகர் அப்பாவுவிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், முதற்கட்டமாக ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் விசாரணை முடிந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும், கே.வி. தங்கபாலு, ரூபி மனோகரன், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் போலீசாரின் விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

News May 29, 2024

தோனி ஏன் இந்திய அணியின் பயிற்சியாளராக ஆக முடியாது?

image

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தோனியை நியமிக்க வேண்டுமென முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, சம்மந்தப்பட்ட வீரர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். 2020இல் சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்த தோனி, ஐபிஎல் தொடரில் இன்னமும் விளையாடி வருகிறார். அதனால், தோனியால் விண்ணப்பிக்க முடியாது.

News May 29, 2024

எனக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்: நவீன் பட்நாயக்

image

தன் உடல்நிலை குறித்து 10 ஆண்டுகளாக பாஜக அவதூறு பரப்புவதாக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு அக்கறை இருந்தால் தன்னிடமே உடல்நிலை குறித்து விசாரிக்கலாம் என்ற அவர், தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதால் தான் ஒரு மாதமாக பரப்புரை செய்வதாக தெரிவித்தார். முன்னதாக, ஒடிஷாவில் பேசிய மோடி, பாஜக ஆட்சி அமைத்ததும், நவீன் பட்நாயக் உடல்நிலை பாதிப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

News May 29, 2024

9 உலகக் கோப்பையிலும் ரோஹித் ஷர்மா

image

டி20 உலகக் கோப்பைத் தொடர், வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பங்கேற்க உள்ளது. 2007ஆம் முதல் 2022 வரை நடந்த அனைத்து டி20 உலகக் கோப்பைத் தொடர்களிலும், ரோஹித் ஷர்மா பங்கேற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற அவர், 2ஆவது டி20 உலகக் கோப்பையை பெற்றுத் தருவாரா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News May 29, 2024

மோடி தோற்க வேண்டும்: பாக்., EX அமைச்சர் சர்ச்சை பேச்சு

image

மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடி தோற்க வேண்டும் என ஒவ்வொரு பாகிஸ்தானியும் விரும்புவதாக பாக்.,முன்னாள் அமைச்சர் ஃபவாத் சௌத்ரி சர்ச்சையை கிளப்பி உள்ளார். பாஜக-ஆர்எஸ்எஸ், பாகிஸ்தான் மீது வெறுப்பைத் தூண்டுவதாக தெரிவித்த அவர், மம்தா, ராகுல், கெஜ்ரிவால் இணைந்து மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றார். முன்னதாக, INDIA கூட்டணிக்கு பாகிஸ்தானில் எழுந்திருக்கும் ஆதரவு விசாரணைக்குரியது என மோடி கூறியிருந்தார்.

News May 29, 2024

மின்சார கார்களுக்கான வாகனப் பதிவு தொடங்கியது

image

தமிழகம் முழுவதும் மின்சார கார்களுக்கான வாகனப் பதிவை மீண்டும் ஆர்டிஓ அலுவலகங்கள் தொடங்கியுள்ளன. கடந்த திங்கள்கிழமை முதல் 3000க்கும் மேற்பட்ட மின்சார கார்களுக்கான பதிவு செய்யப்படவில்லை. இதனால், தமிழகத்தில் மின்சார கார்களுக்கு தடை விதிக்கப்பட்டதா? என கேள்வி எழுந்த நிலையில், தற்போது மீண்டும் மின்சார கார்களுக்கான வாகனப் பதிவு தொடங்கியுள்ளது. இதனால், மின்சார கார் வாங்கியவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

News May 29, 2024

அதர்வாவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ?

image

அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் புதிய படத்தில், அதர்வா நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகவும், நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பாய்ஸ்’ பட நடிகரும், இசையமைப்பாளருமான தமன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 29, 2024

தியான வியூகம் பாஜகவுக்கு கைகொடுக்குமா? (2/2)

image

இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்த மோடி விரும்புவதாக கூறும் அரசியல் விமர்சகர்கள், அதற்காகவே விவேகானந்தர் பாறைக்கு செல்வதாக குறிப்பிடுகின்றனர். தேர்தல் நடத்தை விதிகளால், அவரை குமரிக்கு செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தாலும், பாஜகவிற்கு சாதகமாகவே அமையும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடைசி நேர சர்ச்சை பாஜகவுக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

error: Content is protected !!