India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* பாலியல் புகாரில் சிக்கிய கா்நாடக MP பிரஜ்வால் முன்ஜாமின் மனு தள்ளுபடி.
* பள்ளிகள் திறக்கும் ஜூன் 6ஆம் தேதி பள்ளி மாணவர்கள் ஆதார் பெற நடவடிக்கை எடுக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை.
* பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ், திமுக மனு
* தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், வாகனத்தின் RC ரத்து செய்யும் முறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.
*வெள்ளரிக்காய் ஜூஸ், சரும வறட்சியை தடுப்பதோடு, தோலில் உள்ள வீக்கத்தை சரி செய்கிறது. *தக்காளி ஜூஸ், UV கதிர்களில் இருந்து தோலை பாதுகாக்க உதவுகிறது. *பீட்ரூட் ஜூஸில் உள்ள வைட்டமின் சி, ரத்த ஓட்டத்தை சீராக்கி தோலை பளபளப்பாக்கும். *கீரை சாறுகளில் உள்ள வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே, தோலில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தும். *முட்டைக்கோஸ் சாறு, தோலில் உண்டாகும் கருவளையங்களை சரி செய்கிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் 1ஆம் தேதி (இந்திய நேரப்படி 2ஆம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க்கில் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளனர். முன்னதாக, உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.
உடலுக்கு தினமும் தேவைப்படும் வைட்டமின் சி, 155 சதவிகிதம் வெறும் அரை கப் முள்ளங்கியில் உள்ளது. அதிகளவு வைட்டமின் சி உள்ளதால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி நமக்கு வரக்கூடிய சளி, இருமல் தொல்லையிலிருந்து இது பாதுகாக்கிறது. தீங்கு நிறைந்த ஃப்ரீ ரேடிகல்ஸ், வீக்கம், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் பலன் முழுமையாக கிடைக்க முள்ளங்கியை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
திருச்செல்வன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ தொடருக்கு ஆரம்பத்தில் நல்ல டிஆர்பி இருந்தது. குறிப்பாக, நடிகர் மாரிமுத்துவின் தனித்துவமான நடிப்பு, குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ஆனால், அவரது மறைவுக்கு பிறகு, இத்தொடரின் டிஆர்பி வெகுவாக குறைந்தது. இந்நிலையில், 700 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடர் விரைவில் முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
* மேஷம் – முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும் *ரிஷபம் – அமைதி உண்டாகும் *மிதுனம் – பெருமையான நாள் *கடகம் – மேன்மை உண்டாகும் *சிம்மம் – நிறைவான நாள் *கன்னி – யோகமான நாள் *துலாம் – உதவி கிடைக்கும் *விருச்சிகம் – உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் *தனுசு – நினைத்தது நடக்கும் *மகரம் – நட்பு வட்டம் பெருகும் *கும்பம் – கோபத்தை குறைக்கவும் *மீனம் – தொல்லைகள் வரும்.
2009 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் மொத்தம் 751 கட்சிகள் பங்கேற்றுள்ளன. இது, 2019 தேர்தலில் 677 ஆகவும், 2014 தேர்தலில் 464 ஆகவும், 2009 தேர்தலில் 368 ஆகவும் இருந்துள்ளது. அதன்படி, 15 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை 104% அதிகரித்துள்ளது.
வட இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவில், 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளது. சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும் தரப்பட்டுள்ளது. 1990 முதல் தீவிர வெப்பத்தால் இந்தியா பாதிக்கப்படுவது 15% அதிகரித்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தட்ப வெப்ப மாற்றம் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடுமையான வெப்பத்தை இனி ஆண்டுதோறும் எதிர்கொள்ள வேண்டுமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
தமிழ் திரைத்துறையின் பிரபல ஜோடியான நயன்தாரா, விக்னேஷ் சிவன் விடுமுறைக்காக ஹாங்காங்கிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு இருவரும் பல்வேறு போஸ்களில் புகைப்படம் எடுத்த நிலையில், அவற்றை தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. ரசிகர்கள் பலரும் Cute Couple என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் வயதானவர்கள் தூக்கம் வராமல் கஷ்டப்படுவார்கள். ஆனால், தற்போது இளைஞர்களையும் தூக்கமின்மை பிரச்னை பாதித்துள்ளது. உயிரியல் கடிகாரத்தை சரி செய்தாலே தூக்கமின்மை பிரச்னையில் இருந்து விடுபடலாம் எனக் கூறும் மருத்துவர்கள், தூக்க சுழற்சியை நம்மால் முறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கின்றனர். இரவில் டீ, காபி குடிப்பதையும், பகலில் தூங்குவதையும் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Sorry, no posts matched your criteria.