India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை மஞ்சிமா மோகன், நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், திருமணத்தில் எனது மாமனார் கார்த்திக்கிற்கு விருப்பம் இல்லை, கவுதமிற்கு நான் ஏற்ற ஜோடியில் என்றெல்லாம் வதந்தி பரப்புகின்றனர் என மஞ்சிமா வேதனை தெரிவித்துள்ளார். மேலும், முன்பு இதெற்கெல்லாம் வருத்தமடைந்ததில்லை. ஆனால், திருமணத்திற்குப் பின் ஒருகட்டத்தில் வருத்தமடைந்தேன் எனக் கூறியுள்ளார்.
* 1913 – லண்டன் உடன்பாடு எட்டப்பட்டு முதலாம் பால்கன் போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடானது.
* 1914 – அக்காலத்தின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் அக்குவித்தானியா தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து நியூயார்க் நகரம் நோக்கி ஆரம்பித்தது.
* 1975 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
* 1987 – கோவா இந்தியாவின் தனி மாநிலமாகியது. * 2013 – நைஜீரியாவில் ஒருபால் திருமணம் தடை செய்யப்பட்டது.
வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்றத் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்து டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்குப் பின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 2 முதல் தொடங்க உள்ள நிலையில், இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகளை முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதன்படி, பிரையன் லாரா – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ். சுனில் கவாஸ்கர்- இந்தியா, ஆஸ்திரேலியா. மேத்யூ ஹைடன்- இந்தியா, ஆஸ்திரேலியா. கிறிஸ் மோரிஸ்- இந்தியா, தென் ஆப்பிரிக்கா. பால் காலிங்வுட்- இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என கணித்துள்ளனர். உங்கள் கணிப்பு என்ன?
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், இந்த ஆண்டில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 72 ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. மத்திய வெடிபொருள் கட்டுப்பட்டு துறையின் அனுமதி பெற்று இயங்கிய 33 ஆலைகள், மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி பெற்று இயங்கிய 39 ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 18 ▶குறள்: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. ▶பொருள்: வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.
சினிமா மற்றும் கலையின் மதிப்பீடு அதன் தன்மையைப் பொறுத்து இருக்க வேண்டுமே தவிர பாலினத்தை சார்ந்து இருக்கக் கூடாது என நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார். சினிமாத் துறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம்பள விகிதத்தில் அதிகமாகவே வேறுபாடு இருக்கிறது என்ற அவர், இந்த பாலின வேறுபாடுகள் களைய வேண்டும் என்றார். மேலும், உடனடியாக யில்லை என்றாலும், காலப்போக்கில் இது மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று முன்தினம் 126டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதுதான் நடப்பு ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், சென்சார் கருவியில் பழுது ஏற்பட்டதன் காரணமாக் கூட இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளது.
இன்று (மே 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 3 T20, 3 ODI போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் T20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற இங்கி., ODI தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் ODIயில் இங்கி., வென்ற நிலையில் இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் இங்கி., 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Sorry, no posts matched your criteria.