News May 30, 2024

இந்த ஜோடியை முதலில் களமிறக்க வேண்டும்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – ஜெய்ஸ்வால் ஜோடியை களமிறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் யோசனை கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “அந்த தொடக்கத்தைப் பொறுத்து ரோஹித் ஷர்மா, சூர்யகுமாரை 3, 4ஆவது வரிசையில் பயன்படுத்திக் கொள்ளலாம். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக ஆடக்கூடிய ரோஹித்துக்கு அதில் சிக்கல் இருக்காது” என்றார்.

News May 30, 2024

இனி 3 மணி நேரத்தில் மருத்துவ காப்பீடு தொகை

image

மருத்துவ காப்பீடு தொகை செட்டில்மெண்ட் தொடர்பாக IRDAI புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, காப்பீடு தொகையை ரொக்கமாக இல்லாமல் வங்கி கணக்கில் ஆன்லைனில் செலுத்தும் கோரிக்கை எழுந்தால், 1 மணி நேரத்தில் செட்டில் செய்ய வேண்டும். பிற கோரிக்கைகள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும். வாடிக்கையாளருக்கு காப்பீட்டை புதுப்பிக்க ஒரு மாத அவகாசம் அளித்து, பழைய பலனைத் தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

News May 30, 2024

HSBC வங்கிக்கு ரிசர்வ் வங்கி ₹36 லட்சம் அபராதம்

image

HSBC வங்கிக்கு ரிசர்வ் வங்கி ₹36.4 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999இன் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்ட விதிகளை பின்பற்றாமல் மீறி விட்டதாக HSBCக்கு விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு அந்த வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், HSBCக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

News May 30, 2024

இன்று முதல் +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

image

+1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, ஜூன் 4க்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

News May 30, 2024

பாஜகவுக்கு ‘ரசகுல்லா’தான் கிடைக்கும்: மம்தா பானர்ஜி

image

மேற்கு வங்கத்தில் இம்முறை அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என மோடி கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, “மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் சுதந்திரம், மதச்சார்பின்மை, மனிதநேயம் இருக்காது என மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். பாஜகவுக்கு வங்காளிகளிடமிருந்து ரசகுல்லாதான் (பூஜ்ஜியம்) கிடைக்கும்” எனக் கிண்டலாக தெரிவித்தார்.

News May 30, 2024

கடைசி வரை வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும்

image

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4இல் வெளியாக உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக செயல்பட அதிமுக முகவர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். எந்தக் கட்சி முன்னணிக்கு வந்தாலும், இறுதி சுற்று வரை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து விவரத்தை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினர் தில்லுமுல்லு செய்கின்றனரா என்பதை கண்காணிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

News May 30, 2024

ஜூலையில் வெளியாகும் வணங்கான்?

image

பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் நடித்துவரும் படம் ‘வணங்கான்’. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ஜூலை மாதம் இப்படம் ரிலீசாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதே மாதத்தில் இந்தியன் 2 படமும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 30, 2024

தீராத பிணி தீர்க்கும் க்ஷேத்ரபாலர்

image

உலகில் உள்ள நீர்நிலைகள் தொடங்கி செல்வ வைப்பிடங்கள் வரை அனைத்தையும் காக்க சிவபெருமானால் படைக்கப்பட்ட காவல் தெய்வம்தான் க்ஷேத்ரபாலர். சோழர்கள் காலத்தில் க்ஷேத்ரபாலர் வழிபாடு உச்சத்தில் இருந்தபோது, குடந்தை திருநல்லகூகூரில் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயிலில் அவருக்கென தனி சந்நிதி எழுப்பப்பட்டது. தீராத பிணிகளால் வாடுவோர் இங்கு வந்து பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபட்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

News May 30, 2024

விழுப்புரம்- திருப்பதி ரயில் சேவை 30 நாள்களுக்கு மாற்றம்

image

பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரம்- திருப்பதி ரயில் சேவை ஜுன் 1 முதல் 30 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும், அந்த ரயில் காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இனி காட்பாடியில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் என தென்மத்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

News May 30, 2024

பெட்ரோல், டீசல் வாகனங்கள் நிறுத்தப்படும்: நிதின் கட்காரி

image

அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை முற்றிலும் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். தற்போது மின்சாரத்தில் இயங்கும் பைக், கார்கள் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், பாஜக ஆட்சியில் சாலைப் போக்குவரத்தில் பல பிரமாண்டமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். மேலும், ₹100க்கு பெட்ரோல் போடுவதை விடவும், ₹4 செலவில் மின்சார வாகனங்களை இயக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!