India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக் கோப்பை தொடரில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்குக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் மாற்று வீரராக அவர் அணியில் பயணிக்கிறார். இது குறித்து பேசிய அவர், “சிறப்பாக செயல்பட்டு வந்தபோதிலும் உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாதது வருத்தமாகத் தான் இருந்தது. என் கையில் எதுவும் இல்லை. என்ன நடந்தாலும் அது நன்மைக்கே. தொடர்ந்து கடினமாக உழைப்பேன்” என்றார்.
காமெடி நடிகர் வடிவேலு, தனது தாயார் வைத்தீஸ்வரி மீது மிகுந்த அன்பு கொண்டவர். கடந்த ஆண்டு தனது 87ஆவது வயதில் அவர் காலமானார். அதற்கு முன்பு, வைத்தீஸ்வரியுடன் வடிவேலு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் வடிவேலு தனது அம்மாவின் கன்னத்தில் பாசமாக முத்தமிடும் காட்சி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த வடிவேலு ரசிகர்கள், அவரின் தாய் பாசத்தை பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரம் வானூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ பரமசிவம் உடல்நலக்குறைவால் காலமானார். 1977ஆம் ஆண்டில் எம்எல்ஏவாக இருந்த அவர், கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் தற்போதைய பாமக மாநிலத் துணைத் தலைவர் சங்கரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கட்சி நிர்வாகிகள் உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி அஞ்சலியில் ராமதாஸ் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
அம்பதி ராயுடுவின் மனைவிக்கு கோலியின் ரசிகர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக அவரது நண்பர் சாம்பால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில், “ராயுடுவின் மனைவி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பலாத்காரம் & கொலை மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகள், குண்டர்கள் & PR ஏஜென்சிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
T20 உலகக் கோப்பை போட்டிகளில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் 36 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை சாய்த்து, அதிக விக்கெட் கைப்பற்றியோர் பட்டியலில் முதலாவதாக உள்ளார். 129.1 ஓவர் பந்துவீசி, 876 ரன்களை விட்டுக் கொடுத்துள்ள அவர், 3 முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதற்கடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி 34 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை கைப்பற்றி 2ஆவது இடத்தில் உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் திருச்சி வருகிறார். தொடந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலபைரவர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் அவர், பின்னர் மாலை 5.20 மணிக்கு திருச்சி சென்று அங்கிருந்து திருப்பதிக்கு பயணம் செய்ய உள்ளார்.
உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த 400 வீரர்கள் பலியானதாகவும், உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய 2 டாங்கிகள், 11 கவச வாகனங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்து விட்டதாகவும் ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.
சிறந்த புத்திசாலியாக விளங்க மூளை திறன் அபாரமாக இருப்பது அவசியம். அந்தத் திறனை அதிகரிக்க சில பயிற்சிகள் மருத்துவ ஆலோசகர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. 1) புதிர், சோடோக்கு விளையாட்டு விளையாடுதல் 2) வாசிப்பு பழக்கத்தை கடைபிடித்தல் 3) இசைக்கருவி பயிற்சி, வேற்று மொழி என எதையாவது புதிதாக கற்றல் 4) வேடிக்கையான மூளை விளையாட்டுகள் 5)நண்பர்களுடன் இனிமையாக பேசி விளையாடுதல் ஆகும்.
17 ஆண்டுகால டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள் யார்-யாரென தெரிந்து கொள்வோம். இந்திய வீரர் கோலி, 27 போட்டிகளில் 1,141 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே (1,016 ரன்), வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கெய்ல் (965), இந்திய வீரர் ரோஹித் ஷர்மா (963), இலங்கை முன்னாள் வீரர் தில்ஷான் (897) அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர்.
ஊரகப் பகுதிகளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வந்த பிறப்பு, இறப்பு விபரங்கள், தற்போது மருத்துவமனை வாயிலாக உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும், சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு சான்று நகல்கள் தேவைப்படுவோர் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெறலாம். என்ன காரணத்திற்காக கேட்கிறார்கள்? என்பதை தெரிந்து வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.