News May 30, 2024

“இந்தியா” பெயர் வந்தது எப்படி? (1/3)

image

ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு நமது நாடு பல பகுதிகளாக பிரிந்து, தனித்தனி ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன. அவற்றை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றி ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தது. இதுபோல கடந்த 1757 – 1947 வரை நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். அப்போது சிந்து நதிக்கரையோரம் உள்ள பிரதேசத்துக்கு பிரிட்டிஷ் இந்தியா என பெயரிட்டு ஆங்கிலேயர்கள் அழைத்து வந்தார்கள்.

News May 30, 2024

AI குரலா, ஒரிஜினலா? அறிய Truecallerஇல் வசதி

image

AI மூலம் ஒருவரின் குரலை அவருக்கு தெரியாமல் மாதிரி எடுத்து, அவருடன் தொடர்புடையவரிடம் மர்ம நபர்கள் பேசி நிதிமோசடி, குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுக்க AI Call Scanner வசதியை முதல்முறையாக அமெரிக்காவில் கட்டண வாடிக்கையாளர்களுக்கு மட்டும் Truecaller அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியானது, செல்போனுக்கு வரும் அழைப்பை கிரகித்து, அது உண்மையான குரலா இல்லை AI குரலா எனத் திரையில் காண்பிக்கும்.

News May 30, 2024

‘ALL EYES HINDUS IN PAKISTAN’ சர்ச்சையை கிளப்பும் ராகுல்

image

‘ALL EYES ON RAFAH’ என்று பாலிவுட் பிரபலங்கள், எழுத்தாளர்கள் பலர் பதிவிட்டு வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் தெவாடியா பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘ALL EYES HINDUS IN PAKISTAN’ என குறிப்பிட்டு பாகிஸ்தானில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

News May 30, 2024

அணு ஆயுத தயாரிப்பில் தீவிரம் காட்டுகிறதா ஈரான்?

image

அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் பணியை தீவிரமாக ஈரான் மேற்கொண்டுவருவதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து பேசிய அதன் இயக்குநர் ரபேல் குரோஷி, “பிப்ரவரியில் 20.06 கி.கி., இருந்த ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் நிலை தற்போது 142.1 கி.கி அளவுக்கு 60% உயர்ந்துள்ளது. இந்த செயல் அணு ஆயுதம் தயாரிப்புக்கு நிகரானது” எனக் கவலை தெரிவித்தார்.

News May 30, 2024

A.I. டிவியை அறிமுகம் செய்த LG

image

செயற்கை நுண்ணறிவு எனப்படும் A.I. தொழில்நுட்பத்தை உலகின் அனைத்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், தென்கொரியாவின் முன்னணி நிறுவனமான எல்.ஜி. தற்போது இரண்டு A.I. மாடல் தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்துள்ளது. இவை, 43 முதல் 97 இன்ச் அளவுகள் வரை கிடைக்கும். OLEDevo AI மற்றும் LG QNED AI என அந்த மாடல்களுக்கு எல்.ஜி. பெயரிட்டுள்ளது.

News May 30, 2024

கலைஞர் என் தந்தையைப் போன்றவர்: எஸ்.வீ.சேகர்

image

கலைஞர் கருணாநிதியின் கையைப் பிடிக்கும்போது, மறைந்த தன் தந்தையின் கையை பிடிச்சிருந்த தனக்கு உணர்வு ஏற்பட்டதாக நடிகர் எஸ்.வீ.சேகர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கலைஞர் உடனான நட்புறவு குறித்து பேசிய அவர், கலைஞரைப் போல வேறு யாரும் அத்தனை பாசத்தோடு என்னிடம் பழகவில்லை. ஐடியாலஜியைத் தாண்டி நான் எல்லாருக்கும் நண்பனாகத்தான் இருப்பேன். நட்பில் அரசியல் எல்லாம் பார்க்க மாட்டேன்” எனக் கூறினார்.

News May 30, 2024

அரசுப் பள்ளிகளில் ‘ஸ்கேட்டிங்’ பயிற்சி

image

அரசுப் பள்ளிகளில், ‘ஸ்பீட் ஸ்கேட்டிங்’ பயிற்சி அளிக்கும் வகையில், 80 பயிற்சியாளர்களை களமிறக்க தமிழக ஸ்பீட் ஸ்கேட்டிங் சங்கம் முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்ள திறமையான மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க உள்ளதாக அச்சங்கம் கூறியுள்ளது. இதற்கு ஜூன் முதல் வாரத்திற்குள் பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

News May 30, 2024

டி20 WC: இந்தியா-பாக். போட்டிக்கு ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்

image

டி20 உலக கோப்பையில் நியூயார்க்கில் ஜுன் 9இல் நடக்கும் லீக் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் தனிநபர் தீவிரவாத தாக்குதல் நடத்தப் போவதாக, அண்மையில் ரஷியாவில் உள்ள மாலில் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்ற ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் நியூயார்க் மாகாண நிர்வாகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

News May 30, 2024

பள்ளிகளுக்கு பாடநூல்கள் அனுப்பி வைப்பு

image

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளைக்குள் பாடநூல்கள் அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 6இல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 2.9 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அத்துடன், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்க ₹1.2 கோடியில் 4.18 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டதாகவும் கூறியுள்ளது.

News May 30, 2024

ஏர்டெல் நிறுவனத்துக்கு மீண்டும் அபராதம்

image

டெல்லி, பிஹார் தொலைத் தொடர்பு வட்டங்களில் செல்போன் சந்தாதாரர் விவரங்களை சரிபார்க்க தவறிவிட்டதாக மார்ச் மாதம் ஏர்டெல் நிறுவனத்துக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை ₹4 லட்சம் அபராதம் விதித்திருந்தது. தற்போது 2வது முறையாக, பஞ்சாப் தொலைத் தொடர்பு வட்டத்தில் சந்தாதாரர் விவரங்களை சரிபார்க்க தவறியதாக ₹1.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பங்குச்சந்தைக்கு ஏர்டெல் தகவல் அளித்துள்ளது.

error: Content is protected !!