India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டின் முன்னணி ஆன்லைன் பேமெண்ட் நிறுவனமான பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸின் சந்தை மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேடிஎம் நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை, அதானி குழுமம் வாங்கப் போவதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த தகவலை இருதரப்பும் மறுத்திருந்தாலும், யூகத்தின் அடிப்படையில் பேடிஎம்-இன் பங்குகளை பலரும் வாங்கி வருவதால் இன்று அதன் விலை 5% உயர்ந்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சமூக விரோதிகள் சட்டத்தை கையிலெடுப்பதாக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களுக்கும் பாதுகாப்பில்லை, போலீசுக்கும் பாதுகாப்பில்லை என்று சாடிய அவர், சென்னையில் ஒரே இரவில் 6 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக வேதனை தெரிவித்தார். காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
இரும்பு கம்பியுடனான மண்ணின் பிணைப்பை உறுதி செய்ய ஷாட் கிரீட் முறையில் சிமெண்ட், மணல் கலவை நிரப்பப்படும். மண் அரிப்பை தடுக்க ஹைட்ரோ சீடிங் முறை மூலம் நீர் விதை விதைப்பு மேற்கொள்ளப்படும். இதையடுத்து ஜியோ கிரிட் முறை மூலம் முப்பரிமாண இரும்பு கம்பிகளால் வலுவூட்டப்பட்ட பாய்கள் பரப்பப்பட்டு, இரும்பு கம்பியுடன் பொருத்தப்பட்டு, அதன்மீது புற்கள் வளர்க்கப்படும். இதனால் அங்கு மண் சரிவு தடைபடும்.
நீலகிரியில் நிலச்சரிவை தடுக்க 2021இல் மண் ஆணித் திட்டத்தை (Soil Nailing) தமிழக அரசு அறிமுகம் செய்தது. அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். முதலில் செங்குத்தான மலைபகுதியில் மண் மேற்பரப்பில் சாய்வு முகத்தில் 2 மீட்டர் இடைவெளியில் 3 முதல் 5 மீட்டர் நீளம் வரை துளையிடப்படும். பிறகு துளைக்குள் 32 மில்லி மீட்டர் அளவுள்ள டவல் பார் என்ற இரும்பு கம்பி பொருத்தப்படும்.
ஒடிஷாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவுக்கு எதிராக செயல்படும் தன்மீது கிரிமினல் வழக்கு, அவதூறு வழக்கு உள்பட 24 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். எம்பி பதவி பறிக்கப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும், ED 50 மணி நேரம் விசாரித்ததாகவும் கூறிய அவர், நவீன் பட்நாயக், உண்மையில் பாஜகவை எதிர்த்தால் அவர் மீது ஏன் வழக்கு பதிவாகவில்லை என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் உள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளில் ஜூன் மாத 2 வாரத்திற்குள் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபங்களோடு கல்விக் கற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எம்.பி.க்களில் 324 பேரின் சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 43% அதிகரித்துள்ளதாக ஏ.டி.ஆர். தெரிவித்துள்ளது. அதன் ஆய்வு அறிக்கையில், “2019இல் ₹21.55 கோடியாக இந்த எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு தற்போது ₹30.88 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் பாஜக (183) மட்டுமல்ல காங்கிரஸ் (36), திமுக, சமாஜ்வாடி, விசிக எம்.பி.க்களும் அடங்குவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளராகப்
பணியாற்றிய குறுகிய காலத்தில் இளைஞர்களிடையே பிரபலமானவர் VJ பார்வதி. 29 வயதாகும் பார்வதிக்கு அவரது தாயார் மிகத் தீவிரமாக மாப்பிள்ளை தேடத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக திருமணத் தகவல் மையத்தில் அவரது பெயரைப் பதிவு செய்துள்ளாராம். இந்த வருடம் நிச்சயம் அவரிடம் கல்யாணச் சாப்பாட்டை எதிர்பார்க்கலாம் என அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.
மூன்று நாள்கள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தேசிய பாஜக தலைமை அறிவித்துள்ளது. பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோருக்காக, விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில், அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
நமது நாடு சர்வதேச அளவில் இந்தியா என்ற பொதுவான பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஹிந்தி மற்றும் பிற மொழி பாடங்களில் மட்டும் பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு INDIA என பெயர் வைத்தபோது, மோடி உள்ளிட்டோர் நாட்டை பாரத் எனக் குறிப்பிட்டனர். அப்போது நாட்டின் பெயர் “இந்தியா”வா அல்லது “பாரத்”தா என சர்ச்சை எழுந்து ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.