News May 30, 2024

முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ₹7.8 லட்சம் கோடி சரிவு

image

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4இல் வெளியாகும் நிலையில், இந்திய பங்குச்சந்தை சரியத் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, கடந்த 3 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் சுமார் ₹7.8 லட்சம் கோடி சொத்து மதிப்பை இழந்துள்ளனர். குறிப்பாக, தொழில்நுட்பம், FMCG, ஆட்டோமொபைல் மற்றும் மருத்துவ துறை சார்ந்த பங்குகள் பெரும் சரிவை கண்டுள்ளன. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 230 புள்ளிகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 30, 2024

ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு

image

தமிழ்நாட்டில் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சிவகங்கையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ₹2 பெற்றுக்கொண்டு வெறும் 50 மி.லி அளவிற்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

News May 30, 2024

பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை: நவீன் பட்நாயக்

image

வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லையென, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். நவீனை அவரது தனிச்செயலாளர் வி.கே.பாண்டியன் இயக்குவதாக பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், பிஜேடி கட்சியின் வருங்காலத்தையும், தனது அரசியல் வாரிசையும் மக்களே முடிவு செய்வார்கள் என அவர் பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவிற்கு போதிய ஆதரவு கிடைக்காததால், இது மாதிரியான விமர்சனங்களை வைப்பதாகவும் அவர் கூறினார்.

News May 30, 2024

OnThisDay: சுரேஷ் ரெய்னாவின் ருத்ரதாண்டவம்

image

2014ஆம் ஆண்டு இதே நாளில், பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் Qualifier 2 போட்டியில் ரெய்னா ருத்ரதாண்டவம் ஆடியதை யாராலும் மறக்க முடியாது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK அணி, அதிரடியாக விளையாடி வந்தது. குறிப்பாக, ரெய்னா 12 Four, 6 Six என விளாசி 87(25) ரன்கள் குவித்தார். அப்போட்டியில், 24 ரன்கள் வித்தியாசத்தில் CSK அணி தோல்வி அடைந்தாலும், ரெய்னாவின் பேட்டிங் இன்றும் பேசப்படுகிறது.

News May 30, 2024

சென்னையில் துணை நடிகை பலாத்காரம்

image

சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதுடைய துணை நடிகை தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். 28ஆம் தேதி உறவினர் ஊருக்குச் சென்ற நேரத்தில் நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகாரில் நடிகர் ரமணாவின் கார் ஓட்டுநர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News May 30, 2024

மோடி எதை செய்தாலும் குற்றமா?: நிர்மலா சீதாராமன்

image

பிரதமர் எதை செய்தாலும் எதிர்க்கட்சிகள் குற்றம் காண்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்த அவர், இந்தியாவின் கலாச்சாரத்தை காங்., தலைவர்கள் விரும்பவில்லை எனவும், அவர்கள் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு செல்லவே விரும்புவதாகவும் சாடினார். மோடி பேசினால் குற்றம் கண்டுபிடிக்கும் எதிர்க்கட்சிகள், பேசாமல் தியானம் செய்தாலும் குறை சொல்வதாகவும் தெரிவித்தார்.

News May 30, 2024

டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின்

image

செல்போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் மீது கவனக்குறைவாக கார் ஓட்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து, ஜூன் 4ஆம் தேதி புதிய படத்தில் நடிக்கவுள்ளதால் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என அவர் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் சுப்புலட்சுமி ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார் .

News May 30, 2024

முகேஷ் அம்பானி மகனுக்கு ஜுலை 12இல் திருமணம்

image

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த்துக்கும், குஜராத் தொழிலதிபர் வீரேன் மெர்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2 பேருக்கும் சுபமுகூர்த்த தினமான வருகிற ஜுலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக கருத்தரங்கு மைய கட்டிடத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.

News May 30, 2024

கோலி உடனான உறவு குறித்து பேசிய கம்பீர்

image

விராட் கோலி உடனான தனது உறவு குறித்து நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கோலி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “கருத்துக்கும் யதார்த்தத்திற்கும் வித்தியாசம் உள்ளது. அணியின் வெற்றிக்காக கருத்துத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு என்பது மக்களுக்கு பொழுதுபோக்கு அளிப்பதற்கானது அல்ல” எனக் கூறினார்.

News May 30, 2024

குமரிக்கு படப்பிடிப்புக்காக செல்லும் மோடி : தேஜஸ்வி

image

பிரதமர் மோடி குமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு தியானம் செய்ய செல்லவில்லை, படப்பிடிப்பில் பங்கேற்பதற்காகவே செல்கிறார் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். விவேகானந்தர் பாறையில், கேமரா இன்றி மோடி தியானம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை ஓய்ந்த உடன், மோடி தியானம் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

error: Content is protected !!