India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶மே – 31 ▶வைகாசி – 18 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:00 AM – 10:00 AM வரை, 4:30 PM – 5:30 PM வரை ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM வரை, 6:30 PM – 7:30 PM வரை ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM வரை ▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM வரை ▶குளிகை: 7:30 AM – 9:00 AM வரை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்▶ திதி: நவமி ▶ பிறை: தேய்பிறை
டி20 உலகக் கோப்பைக்காக உகாண்டா கிரிக்கெட் பயன்படுத்துவதாக அறிவித்திருந்த ஜெர்சியை மாற்ற ஐசிசி பரிந்துரைத்துள்ளது. உகாண்டாவின் ஜெர்சி அவர்களின் தேசிய பறவையான பழுப்பு நாரை இடம்பெற்றிருந்தது. தோள் மற்றும் தொடைப் பகுதியில் நாரையின் இறகுகள் இடம்பெற்றிருந்ததால், ஸ்பான்சர் விளம்பரம் இடம்பெறுவதில்லை சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக ஜெர்சியை மாற்ற ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாகவே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு என்பவர் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார். அதில் தன்னைவிட குறைந்த வயது நபரை காதலிக்கும் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக கவின் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
* பிறருக்குத் தேவைப்படும்போது நல்லவர்களாகத் தெரியும் நாம்தான், அவர்களது தேவை முடிந்தவுடன் கெட்டவர்களாகிவிடுகிறோம்.
* புகழை நாம் தேடித் செல்லக்கூடாது, அதுதான் நம்மைத் தேடிவர வேண்டும்.
* ஊக்கத்தை கைவிடாதே அதுதான் வெற்றியின் முதல் படி.
* எதிரிகள் தாக்கித்தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித்தாங்கி வலுவைப் பெற்றிடுங்கள்.
பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பணமோசடி, ஊழல் என பல வழக்குகள் உள்ளன. இதில், ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தில் பெருத்த சேதாரம் ஏற்பட்டதால், அவர் மீது கலவர வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் கலவர வழக்கில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. ஏற்கெனவே 3 போட்டிகள் முடிந்த நிலையில், இங்கி., 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் முதலில் ஆடிய பாக்., 19.5 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து. பின்னர் ஆடிய இங்கி., 15.3 ஓவரில் வெற்றிபெற்றது தொடரைக் கைப்பற்றியது.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதில் வேலையின்மை, பணவீக்கம் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை என காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். மேலும், சமூகத்தை பிரிக்கும் வகையில் 421 முறை மசூதிகள், கோயில்கள் என்ற வார்த்தையையும், 232 முறை காங்., பெயரையும், 224 முறை முஸ்லீம்கள், மைனாரிட்டிகள் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
* உலக புகையிலை எதிர்ப்பு நாள்
* 1790 – அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமலாக்கியது.
* 1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைத் தாக்கின.
* 1973 – சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அடைந்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணித்த 65 பேரில் 48 பேர் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் (ஜூன் 16,19,23), ஒரு டெஸ்ட் (ஜூன் 28), 3 டி20 போட்டிகள் (ஜூலை 5,7,9) கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி வீரர்கள் விவரம்: ஹர்மன்ப்ரீத் (C), ஸ்மிருதி(VC), ஷஃபாலி, தீப்தி, ஜெமிமா, ரிச்சா, உமா சௌத்ரி, ஹேமலதா, ராதா யாதவ், ஷோபனா, ஸ்ரேயங்கா, இஷாக், வஸ்த்ரகர், ரேணுகா, அருந்ததி, பிரியா
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 19 ▶குறள்: தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். ▶பொருள்: இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
Sorry, no posts matched your criteria.