News May 31, 2024

அதிக வருமான ஈட்ட ஐ.சி.சி இப்படி செய்துள்ளதா?

image

அதிக வருமான ஈட்டுவதற்காக இந்தியா – பாக்., இடையே இருமுறை நடக்கும் வகையில் ஐசிசி அட்டவணையை உருவாக்கியுள்ளதாக பாசித் அலி விமர்சித்துள்ளார். அட்டவணை குறித்து பேசிய அவர், “இவ்விரு அணிகளும் நாக் அவுட் சுற்றிலும் மோதும் வகையில் அட்டவணையை உருவாக்கியுள்ளனர். பாகிஸ்தான் தற்போது கொஞ்சம் குறைவான பார்மில் உள்ளனர். மறுபுறம் ஐ.பி.எல். தொடரில் விளையாடிய இந்திய அணி சிறப்பாக இருக்கிறது” என்றார்.

News May 31, 2024

குடிநீருக்காக பாஜகவிடம் மன்றாடும் கெஜ்ரிவால்

image

டெல்லியில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க ஹரியானா, உ.பி., மாநில அரசுகளிடமே (பாஜக) கெஜ்ரிவால் மன்றாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்த்து வரும் கெஜ்ரிவால், தண்ணீர் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அம்மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கெஜ்ரிவால் உடனான அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து தண்ணீர் கொடுத்து உதவுமா பாஜக?

News May 31, 2024

ஏசி இல்லாத விமானத்தில் பயணிகள் மயக்கம்

image

டெல்லியில் இருந்து சான் ஃபிரான்சிஸ்கோ செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், பல மணி நேரம் தாமதமானதால் பயணிகள் சிலர் மயங்கி விழுந்தனர். கடுமையான வெயிலில் விமானத்திற்குள் அமர வைக்கப்பட்ட பயணிகள், ஏசியும் வேலை செய்யாததால் கடுமையான நீர்ச்சத்து குறைபாட்டுக்கு ஆளானார்கள். இதனையடுத்து, அவர்கள் விமானத்தில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டது.

News May 31, 2024

கருடன் திரை விமர்சனம் (முதல் பாதி)

image

சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கருடன்’ திரைப்படம் ரசிகர்களை சீட் நுனியில் அமர வைக்கிறது. துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு, வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். Interval Block காட்சிகளே கிளைமேக்ஸ் போன்று விறுவிறுப்பாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். முழு விமர்சனத்திற்கு Way2Newsஐ தொடர்ந்து பின் தொடருங்க.

News May 31, 2024

தாய்ப்பால் விற்பனையில் அதிர்ச்சித் தகவல்

image

சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த முத்தையா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் இருந்து தாய்ப்பாலினை பெற்று விற்பனை செய்து வந்ததாக முத்தையா தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய உணவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

News May 31, 2024

விவேகானந்தர் மண்டபம் சென்றவர்கள் வெளியேற்றம்

image

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு காலையில் சென்றவர்கள் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி அங்கு தியானத்தில் ஈடுபட்டிருப்பதால், மக்கள் சென்றுவர காலையில் தடை விதிக்கப்பட்டது. பின்னர், 10 மணியளவில் சிலர் சுற்றுலாப் பயணிகள் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், திடீரென 12 மணியளவில் அவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

News May 31, 2024

இந்திய அணி அச்சுறுத்தலாக இருக்கும்: மைக்கேல் கிளார்க்

image

டி20 உலகக் கோப்பைத் தொடரை வெல்ல விரும்பும் அணிகளுக்கு இந்திய அணி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார். இந்திய அணி சுழற்பந்து வீச்சை அதிகம் நம்பியுள்ளது எனக் கூறிய அவர், டி20 போன்ற குறுகிய வடிவிலான நிறையப் போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது என்றார். அதே போல மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில், இந்திய அணி நல்ல ஃபார்மில் உள்ளது எனவும் கூறினார்.

News May 31, 2024

தாய்ப்பால் விற்பனை ஏன்?

image

தாய்ப்பாலை விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதனையும் மீறி விற்பனை நடைபெறுவது ஏன்? தாய்ப்பால் அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயரும் என்றும், புரதச் சத்து அதிகரிக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால், இதில் உண்மையில்லை என்று உணவுப் பாதுகாப்புத்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. மாறாக, குழந்தைகள் அல்லாதோர் தாய்ப்பால் அருந்துவதால் பாக்டீரியா தொற்று அபாயம்தான் ஏற்படுகிறது.

News May 31, 2024

சென்னையில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்

image

சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட தாய்ப்பால் பாட்டில்களை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புரத மாத்திரைகள் விற்பதற்காக அனுமதி பெற்ற முத்தையா என்பவர், தாய்ப்பால் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சிறிய சிறிய 50 மில்லி பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் விற்கப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தையாவின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

News May 31, 2024

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

image

மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் 11 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான பயிற்சியை ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ‘எண்ணும் எழுத்தும்’ முறை என்பது விளையாட்டு முறையை பின்பற்றி கற்பித்தல் ஆகும்.

error: Content is protected !!