News May 31, 2024

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் நாளையும், இத்துடன், நாளை மறுநாள் (ஜூன் 2) வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 31, 2024

ஆசன வாயில் 1 கிலோ தங்கம்

image

கேரள மாநில கன்னூர் விமான நிலையத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் சுரபி நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 28ஆம் தேதி, மஸ்கட்டில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் ஒரு கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரபியின் ஆசன வாயில் சுமார் ஒரு கிலோ தங்கக் கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News May 31, 2024

மோடியின் சூரிய வணக்கம்

image

குமரி முனையில் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி, இன்று காலை சூரிய பகவானை வணங்கினார். அதன் ஃபோட்டோக்களை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது. காவி உடையுடுத்தி, ருட்திராட்ச மாலையுடன் சூரியனை வழிபட்ட மோடி, அதன்பின் விவேகானந்தர் பாறையில் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, அவருக்கு தனியான அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

News May 31, 2024

முதல்வரின் டெல்லி பயணம் திடீர் ரத்து

image

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. ஜூன் 4இல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், INDIA கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, மம்தாவும் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

மருத்துவக் காப்பீடு தொடர்பான அதிரடி உத்தரவு (3/3)

image

7. காப்பீடுத் தொகையை ரொக்கமாக இல்லாமல் வங்கி கணக்கில் ஆன்லைனில் செலுத்தும் கோரிக்கை எழுந்தால், 1 மணிநேரத்தில் தீர்வு காண வேண்டும். 8.சிகிச்சை பெறும் பயனாளி, ஒருவேளை இறக்க நேரிட்டால், நிறுவனம் விரைவாக உரிமைகோரல் தொகையை வழங்க வேண்டும். 9. உரிமைகோரல் மறு ஆய்வுக் குழுவின் ஒப்புதல் இல்லாமல், எந்த கோரிக்கையையும் நிராகரிக்க கூடாது. 10. இந்த மாற்றங்கள் அனைத்து ஜூலை 31-க்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

News May 31, 2024

மருத்துவக் காப்பீடு தொடர்பான அதிரடி உத்தரவு (2/3)

image

3.காப்பீடு தொகையை வங்கி கணக்கில் செலுத்தும் கோரிக்கை எழுந்தால், 1 மணி நேரத்தில் செட்டில் செய்ய வேண்டும். 4.பயனாளி டிஸ்சார்ஜ் ஆவதற்கு (3 மணி நேரம்) முன், க்ளைம் தொகைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். 5.தாமதம் ஏற்பட்டால், கூடுதல் செலவை நிறுவனம், அதன் சொந்த நிதியில் இருந்து வழங்க வேண்டும். 6 காப்பீட்டை ஆண்டுதோறும் புதுப்பிக்க ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்குவதோடு, பழைய பலனையும் அளிக்க வேண்டும்.

News May 31, 2024

மருத்துவக் காப்பீடு தொடர்பான அதிரடி உத்தரவு (1/3)

image

மருத்துவ காப்பீடு செய்த கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் வகையில், அவற்றின் சேவைகளை மேம்படுத்த தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏஐ அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் இதோ:- 1. காப்பீட்டாளர்களின் 100% பணமில்லா கோரிக்கைகளுக்கு ஒரு மணி நேரத்தில் தீர்வு காண வேண்டும். 2. பயனாளிகளின் தேவை & பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க மருத்துவமனைகளில் தனிப்பட்ட உதவி மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

News May 31, 2024

ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

image

நாளை ஜூன் மாதம் பிறக்க உள்ள நிலையில், அமலாக உள்ள முக்கிய மாற்றங்களைப் பார்க்கலாம்.
1. கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம்
2. ஓட்டுநர் உரிமத்தை டிரைவிங் ஸ்கூல் மூலமே பெறலாம், RTO செல்லத் தேவையில்லை. எனினும், இம்முறை தமிழகத்தில் அமலாகிறதா? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
3. சிறார் வாகனம் ஓட்டினால் ₹25,000 அபராதம், RC உடனடியாக ரத்து 4. ஜூன் 14 வரை கட்டணமில்லாமல் ஆதாரை புதுப்பிக்கலாம்.

News May 31, 2024

கல்வித்துறையில் தமிழகம் முன்னிலை

image

தமிழகத்தின் கல்வித்துறை நாலுகால் பாய்ச்சலில் வளர்ச்சி கண்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உயர் கல்வியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், பெண்களின் உயர் கல்விச் சேர்க்கை 34% அதிகரித்திருப்பதாகவும் கூறினார். நான் முதல்வன் திட்டம் மூலம் 27 மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும், அரசுப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News May 31, 2024

பிரஜ்வாலுக்கு ஆண்மை பரிசோதனை?

image

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய கர்நாடக எம்.பி., பிரஜ்வால் ரேவண்ணாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அவர் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமின் மனு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

error: Content is protected !!