India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்தில் 500 ரூபாய், நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக RBI வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில், 500 ரூபாய் நோட்டின் புழக்கம் 86.5%ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு, ₹2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதும் ஒரு காரணம் என RBI தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை குவித்த, 2ஆவது வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில், 36 ரன்களை சேர்த்த அவர், இந்த புதிய சாதனையை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டியில் 4 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமை விராட் கோலி வசம் உள்ளது. தற்போது, கோலி 4037, பாபர் ஆசாம் 4023 ரன்களை எடுத்துள்ளனர்.
நடிகர் விஜய் இல்லாமல், ‘G.O.A.T’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடிட்டிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘விசில் போடு’ பாடலைத் தொடர்ந்து, விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், தூத்துக்குடி, பெரம்பலூர், தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வெப்பம் சற்று தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல தேவையான திட்டங்களை டிராவிட் வகுக்க வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் லாரா வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியிடம் எவ்வளவு சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்ற அவர், மைதானத்தில் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதே முக்கியமானது எனக் கூறினார். உலகக் கோப்பை இறுதி கட்ட போட்டிகளில் இந்தியா தொடர்ந்து தடுமாறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவர், நேற்று நள்ளிரவு பெங்களூரு திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று மாலை முதல் அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்குகின்றனர்
உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு மானிய விலையில் (₹300 குறைவாக) சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் சிலிண்டர் பெறுவோர், E-KYC கட்டாயம் செய்திருக்க வேண்டும். அதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், E-KYC செய்து முடிக்காத பயனாளர்களுக்கு நாளை முதல் மானிய விலையில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பிஹாரில் 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர். வாக்குச்சாவடிக்கு இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நான்கு பேரும் உயிரிழந்தனர். சமீப காலங்களில் முன்எப்போதும் இல்லாத வகையில், 29 பேர் பிஹாரில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தியா-வங்கதேசம் இடையேயான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம், நாளை இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இப்போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம். நாளை மறுநாள் டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்க உள்ளதால், நாளையுடன் பயிற்சி ஆட்டங்கள் நிறைவடைய உள்ளன. 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
நியாயத்துக்கும் விசுவாசத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன், இறுதியில் எதைத் தேர்வு செய்கிறான் என்பதே கதை. கணிக்க கூடிய கதை என்றாலும், தொய்வு இல்லாமல் சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறது திரைக்கதை. இடைவேளைக் காட்சி சிலிர்க்க வைக்கிறது. சிங்கிள் ஷாட்டில் சூரி பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில், சூரியின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இது இருக்கும்.
Way2News Rating: 3/5
Sorry, no posts matched your criteria.