News May 31, 2024

57 தொகுதிகளில் நாளை கடைசி கட்டத் தேர்தல்

image

8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் நாளை கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு மேல், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் உடனுக்குடன், துல்லியமாகவும், விரைவாகவும் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News May 31, 2024

கால்நடை மருத்துவ படிப்பு: ஜூன் 3 முதல் விண்ணப்பம்

image

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழக இளநிலை பட்டப் படிப்புகளில் (உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம்) சேர, வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் <>tanuvas.ac.in<<>> என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், தரவரிசை பட்டியல் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 31, 2024

12 வருடமாக முறியடிக்கப்பட முடியாத சாதனை

image

டி20 உலகக் கோப்பை போட்டியில் 2 முறை சதமடித்த ஒரே வீரராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உள்ளார். 20 ஒவர் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 11 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக நியூசிலாந்தின் மெக்கல்லம், 2012இல் வங்க தேசத்திற்கு எதிராக 123 ரன்களை எடுத்தார். 2ஆம் இடத்தில் 117 ரன்களுடன் கெய்ல் உள்ளார். இந்தியா சார்பாக ரெய்னா மட்டுமே இதுவரை சதம் (101 ரன்கள்) அடித்துள்ளார்.

News May 31, 2024

தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிக்க வேண்டும்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, முதலில் தபால் வாக்குகளை எண்ணக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே, மின்னணு வாக்குகளை எண்ண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. முறைகேடுகளை தவிர்க்க இந்த முறையை பயன்படுத்த வேண்டும் எனவும், திமுக கோரியுள்ளது. தபால் வாக்குகளை முழுமையாக எண்ணி முடிக்க 2 முதல் 3 மணி நேரமாக வாய்ப்புள்ளது.

News May 31, 2024

பத்ரிநாத் கோவிலில் ரஜினி சாமி தரிசனம்

image

ஜார்கண்ட்டில் உள்ள பத்ரிநாத் கோவிலில், நடிகர் ரஜினி சாமி தரிசனம் செய்தார். ‘கூலி’ படப்பிடிப்பிற்கு முன்பு ஆன்மீக பயணமாக ஒரு வாரம் இமயமலை சென்றுள்ள அவர், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார். நேற்று, டேராடூனில் உள்ள புனித ஸ்தலத்திற்கு சென்ற அவர், இன்று விஷ்ணு கோயிலில் வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து, கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கும் செல்ல உள்ளார்.

News May 31, 2024

வெயில் கொடுமையால் இதுவரை 54 பேர் பலி

image

வெயில் காரணமாக நாடு முழுவதும் இதுவரை, 54 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் வரலாறு காணாத வகையில், 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு ஹூட் ஸ்ட்ரோக் போன்ற, பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உண்டாகிறது. எனவே, பகலில் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 31, 2024

முதல் முறையாக தியேட்டரில் தேர்தல் முடிவு ஒளிபரப்பு

image

முதல் முறையாக தேர்தல் முடிவுகள் தியேட்டரில் ஒளிபரப்பாக உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள சில மல்டிபிளக்ஸ் தியேட்டரில், காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பு செய்ய உள்ளனர். இதற்காக ₹99 முதல் ₹300 வரை கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. தியேட்டரில் படம் பார்த்து பழக்கப்பட்ட மக்கள் தேர்தல் முடிவை பார்க்க வருவார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஜூன் 4இல் தேர்தல் முடிவு வெளியாகிறது.

News May 31, 2024

சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு யாரும் கிடையாது

image

டி20 உலகக் கோப்பையில், சுரேஷ் ரெய்னாவைத் தவிர வேறு எந்தவொரு இந்திய வீரரும் சதம் அடித்ததே கிடையாது. ஆம், 2010இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரெய்னா 101 ரன்கள் எடுத்ததே, இந்திய அணியின் அதிகபட்ச தனி நபர் ரன் ஆகும். கோலி- 89*, ரோஹித்- 79* ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். எனவே, எதிர்வரும் உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் புதிய சாதனை படைப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News May 31, 2024

யூடியூபர் VJ சித்து மீது புகார்

image

யூடியூபர் VJ சித்துக்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. TTF வாசனைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அஜாக்கிரதையாக, செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வீடியோவில் ஆபாச வார்த்தைகள் மற்றும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

மாநிலம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவு

image

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு, தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4இல் எண்ணப்பட உள்ளன. இது தொடர்பாக, உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஷிவ்தாஸ் மீனா, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், நிலைமையை கட்டுக்குள் வைக்க வேண்டும் போன்ற பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

error: Content is protected !!