News July 4, 2025

ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள்.. காரணம் என்ன?

image

மிக கொடுமையான விஷயங்களில் ஒன்று தனிமை. தனிமையால் ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள் உலகளவில் நடப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்டுள்ளது. 6-ல் ஒருவர் உலகளவில், தனிமையால் உயிரிழப்பதாகவும், கடந்த 2014 – 2013 வரை 8.7 லட்சம் மக்கள் இதனால் மரணத்தை சந்தித்துள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது. டீனேஜ் மற்றும் இளைஞர்கள் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2025

300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்த ஆகாஷ் தீப்

image

கடப்பாரை பேட்டிங்னா இங்கிலாந்துதான் என்பதை நிரூபிப்பது போல் 2-வது டெஸ்டில் ஹேரி புரூக்கும்(158), ஜேமி ஸ்மித்தும்(184) விளையாடினர். 100/5 என்று இருந்த இங்கிலாந்து அணியை இருவரும் சதம் அடித்து, சரிவில் இருந்து மீட்டனர். இந்த பார்ட்னர்ஷிப் 300 ரன்களை கடந்து இந்தியாவுக்கு தலைவலியாக மாறியது. இந்நிலையில் ஆகாஷ் தீப் ஹேரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு நிம்மதி அளித்தார்.

News July 4, 2025

மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…

image

மழை சீசனில் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம். இந்நிலையில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உணவுகள் உதவும்: *சீசன் பழங்கள்: ஆப்பிள், நாவல், லிச்சி, பப்பாளி, பேரிக்காய், மாதுளை *தயிர், மோர் -அளவுடன் பகலில் மட்டும் *சுண்டைக்காய், வேப்ப விதைகள், மூலிகை டீ போன்ற கசப்பு உணவுகள் *வேகவைத்த காய்கறிகள் *கொய்யா, ஆரஞ்சு (வைட்டமின் சி பழங்கள்) *இஞ்சி, பூண்டு *மத்தி மீன், இறால், நட்ஸ், அவகாடோ உள்ளிட்டவை.

News July 4, 2025

ஜூலை 7-ம் தேதி அரசு விடுமுறை இல்லை

image

மொஹரம் பண்டிகைக்கு ஜூலை 7-ம் தேதி அரசு விடுமுறை என்ற தகவல் சில நாள்களாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை, 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறதே என மகிழ்ந்தனர். ஆனால் மொஹரம் பண்டிகை ஜூலை 6-ல் கொண்டாடப்படுகிறது. அதில் மாற்றமில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானது என தமிழக அரசின் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ஜூலை 7-க்கு லீவு இல்லை.

News July 4, 2025

விபரீதத்தில் முடிந்த பாலியல் ஆர்வம்

image

டெல்லியை சேர்ந்த 27 வயது பெண், அடிவயிற்று வலி, மலம் கழிக்க முடியாத நிலை போன்ற அறிகுறிகளுடன் ஹாஸ்பிடலுக்கு சென்றுள்ளார். அவரை டாக்டர்கள் சோதித்த போது, மலக்குடலுக்குள் மாய்ஸ்சுரைசர் பாட்டில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பாலியல் ஆர்வத்தில் உறுப்பில் பாட்டிலை நுழைக்க, அது உள்ளே மாட்டிக் கொண்டதாக பெண் கூறினார். அதன்பின், sigmoidoscopy-யை பயன்படுத்தி பாட்டிலை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.

News July 4, 2025

பழைய ஓய்வூதிய திட்டம்: விரைவில் குட் நியூஸ்

image

தமிழகத்தில் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அதாவது இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது. இதனால் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையே பழைய ஓய்வூதியம் குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

News July 4, 2025

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

ஈட்டிய விடுப்பில் 15 நாள்கள் வரை அக்.1 முதல் சரண் செய்து பணப் பயன் பெற்றுக்கொள்ளலாம் என TN அரசு அறிவித்துள்ளது. 2026-ம் ஆண்டு ஏப்.1 முதல் அமலாகும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே (அக்.1 முதல்) ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர். இதற்காக ஆண்டுக்கு ₹3,561 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.

News July 4, 2025

ALERT:தினமும் குட்டித் தூக்கம் போடுறீங்களா… ஆபத்து!

image

வழக்கமாக குட்டித்தூக்கம் எடுக்காதவர்களை விட, தினசரி குட்டித்தூக்கம் தூங்குகிறவர்களுக்கு high BP வர 12%-மும், மாரடைப்பு ஏற்பட 24%-மும் வாய்ப்பு அதிகம் என்கிறது அண்மை ஆய்வு. இதற்காக பிரிட்டனில் 3,60,000 பேரிடம் 11 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது. குட்டித் தூக்கத்தால் இரவுத் தூக்கம் பாதிப்பது தான் பிரச்சனைக்கு முக்கிய காரணமாம். பொதுவாக, குட்டித்தூக்கம் உற்சாகத்தை தரும் என கூறப்படுவதுண்டு.

News July 4, 2025

மறுகூட்டல் மூலம் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை

image

பொள்ளாச்சியை சேர்ந்த குருதீப் என்ற மாணவன் சமூக அறிவியல் பாடத்தில் 95 மதிப்பெண்கள் எடுத்த நிலையில், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தார். அதன் முடிவுகள் இன்று வெளியானது. அதில் அவர் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தமிழில் 99 மதிப்பெண்கள் எடுத்த நிலையில், மற்ற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து, மொத்தமாக 499 மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளார். வாழ்த்துகள் குருதீப்!

News July 4, 2025

FLASH: தூத்துக்குடியில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

image

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் TNSTC சிறப்புப் பஸ்களை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!