India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புட்டாலம்மை பாதிப்பைக் குறைக்கும் சில சிகிச்சைமுறைகளை (அலோபதி & மரபு) எடுத்துக்கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி வைப்பது கூட தடுப்பு மருந்ததாக சொல்லப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுகளை அளிக்கலாம். மஞ்சள், வேப்பிலை அரைத்து பற்றுப்போடுவது, வெந்நீரால் உடலை சுத்தம் செய்வது போன்ற சுகாதார விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
உமிழ்நீர் சுரப்பிகளை பாதிக்கும் மம்ப்ஸ் வைரஸால் ஏற்படும் அம்மை பாதிப்பை புட்டாலம்மை என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். இந்த வைரஸ் தாடையடி, நாக்கு & செவியோரம் ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ள சுரப்பிகளை வீரியமாக தாக்கி, வலியை ஏற்படுத்தும். இந்த வைரஸ் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் என்பதால் பாதிப்பு அதிகமிருக்காது என்றாலும் ஆஸ்துமா & பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிரமம் ஏற்படலாம்.
INDIA கூட்டணி 300க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். Exit Poll முடிவுகள் ஆளுவோருக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகவே இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் எனக் கூறிய அவர், இம்முறை தகிடுத்திட்டங்கள் எதுவும் பலனளிக்காது என்றார். அத்துடன், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிஹார் அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிவேக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார்.
1)யுவராஜ் சிங் – 12 பந்துகளில் vs இங்கிலாந்து
2)ஸ்டீபன் மைபர்க் – 17 பந்துகளில் vs அயர்லாந்து
3)ஸ்டொய்னிஸ் – 17 பந்துகளில் vs இலங்கை
4)மேக்ஸ்வெல் – 18 பந்துகளில் vs பாகிஸ்தான்
5)கே.எல் ராகுல் – 18 பந்துகளில் vs ஸ்காட்லாந்து
6)ஷோயப் மாலிக் – 18 பந்துகளில் vs ஸ்காட்லாந்து
RCB அணிக்காக விளையாடியது போலவே டி20 உலகக் கோப்பை தொடரிலும் விராட் கோலி விளையாட வேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார். இந்தியா சிறப்பாக செயல்பட ரோஹித் & விராட் ஆகியோர் டாப் ஆர்டரில் விளையாட வேண்டும் என்ற அவர், அது நியூயார்க்கில் அவர்களுக்கு உதவும் எனக் கூறினார். அத்துடன், அவர்களை சுதந்திரமாக பேட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
காலையில் தூங்கி எழுந்ததும் சாப்பிடும் உணவே நாள் முழுவதும் சக்தியளிக்கும். காலை 7 அல்லது 8 மணிக்கு சாப்பிடுகிறோம் எனில், அதிலிருந்து 4-5 மணி நேரத்திற்குள் மதிய உணவு உண்பது அவசியம். இல்லையெனில், மதியம் 2 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. இரவு உணவும் இதே இடைவெளியில் உண்பது சிறப்பு. இவ்வாறு, குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்பது, உடல் எடையை சீராக வைக்கவும், நோய் வராமல் காக்கவும் உதவும்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதுவரை 4 வீரர்களை தக்க வைக்கலாம் என்று இருந்த சட்டத்தை 3 வீரர்களாக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இது சிஎஸ்கே அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தோனி, ஜடேஜா, ருதுராஜ், பதிரனா, துபே ஆகிய வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். 3 பேரை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற விதி வந்துவிட்டால், இதில் ஒருவரை CSK இழக்க நேரிடலாம்.
மோடி 3ஆவது முறையாக பிரதமராவதை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், INDIA கூட்டணியின் இன்றைய கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை எனவும், இதனால் எதிர்க்கட்சிகள் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மோடியின் தியானத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கின் இயக்கும் 11ஆவது படமான இது, ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை எனக் கூறப்படுகிறது. இதில், பப்லு பிரித்விராஜ், நாசர், பாவனா, கே.எஸ்.ரவிக்குமார், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், பெரம்பலூர், விருதுநகர், திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.