India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், PM மோடியும் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளின் வர்த்தக குழுக்களும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து தீவிர விவாதங்களில் ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் கரோலின் லீவிட் குறிப்பிட்டார். டிரம்ப், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியலில் சில தவறுகளை தான் செய்துவிட்டதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது; மற்றொன்று கட்சித் தலைவர் பதவியை அவரிடம் கொடுத்தது. அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக சாடிய அவர், அன்புமணி கும்பல் பற்றி பேசினால் என் வளர்ப்பு சரியில்லை என்பீர்கள்; அங்கு உள்ள எல்லோரும் நான் வளர்த்த பிள்ளைகள்தான் என மனம் உடைந்து பேசினார்.

மனிதன் சாகா வரம் பெற முடியுமா (அ) இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்க முடியுமா என்ற ஆராய்ச்சிகள் பல காலமாக நடக்கிறாது. அதன் விளைவாக பல கண்டுபிடிப்புகளும் அறிமுகமாகியுள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் அந்த ஆராய்ச்சிகள் வெற்றியை கண்டுவிட்டால் மனிதர்களால் சாகாமல் பல நூற்றாண்டுகளுக்கு வாழமுடியுமாம். அது என்னென்ன ஆராய்ச்சிகள் என்பதை தெரிந்துகொள்ள போடோக்களை SWIPE பண்ணுங்க. உங்களுக்கு எவ்வளவு நாள் வாழ ஆசை?

கனமழையால் இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தி.மலை, வேலூர், விழுப்புரம், காஞ்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 1 மணி வரை மழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக IMD எச்சரித்துள்ளது. அதேபோல், மதியத்திற்கு மேல் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அரை நாள் விடுமுறை அளிக்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

நியூயார்க்கில் இந்திய வம்சாவளி முஸ்லிம் வேட்பாளரான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றதை ஒப்பிட்டு, மும்பை பாஜக நிர்வாகி அமித் சதாம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கான் என்ற பெயர் கொண்ட எவரும் மும்பையில் மேயராக வரமுடியாது என்ற அவர், இது ஒருபோதும் நடக்காது என கூறியுள்ளார். ஆனால் மும்பையில் இதை நடத்திக்காட்ட சிலர் முற்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிஹாரில் உள்ள 243 தொகுதிகளில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 13% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 3.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 உயர்ந்து ₹164-க்கும், கிலோ வெள்ளி ₹1,000 உயர்ந்து ₹1,64,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து, வரும் நாள்களில் விலையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

18 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின், கோப்பையை வென்ற RCB விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம், வெற்றி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த கூட்டநெரிசல் மரணங்கள் தான் இதற்கு காரணமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக, சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே, RCB அணியின் உரிமம் கைமாற்றிவிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. பிர்சனை இருப்பினும், RCB அணியை வாங்க பலமுனை போட்டி நிலவுகிறதாம்.

நமது Whatsapp-ல் எப்படி மெட்டா AI இணைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல இனி Snapchat-ல் Perplexity AI இணைக்கப்பட உள்ளது. ஜனவரி, 2026-ல் இருந்து Snapchat பயனர்கள் இந்த வசதியை பெறலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இரு நிறுவனங்கள் இடையே சுமார் ₹3,300 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் காரணமாக ஸ்னாப் நிறுவனத்தின் பங்குகள் விலை 16% வரை உயர்ந்துள்ளது.

மனிதாபிமானம் படைத்தவர்களை மரணம் அதிக நாள்கள் வாழ விடுவதில்லை. ஆம்! குஜராத்தை சேர்ந்த காவலர் அரவிந்த அவ்ஹர், மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உதவி செய்யக்கூடிய மனிதநேயமிக்கவர். அப்படி, சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நாய்க்கு உதவி செய்துவிட்டு திரும்பியபோது, வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.