News June 2, 2024

யுபிஐ மூலம் ₹20.45 லட்சம் கோடி பரிமாற்றம்

image

நாடு முழுவதும் கடந்த மே மாதத்தில் மக்கள் யுபிஐ மூலம் ₹20.45 லட்சம் கோடி பரிமாற்றம் செய்துள்ளனர். ஏப்ரலில் அதிகபட்சமாக ₹19.64 லட்சம் கோடி பரிமாற்றம் நடந்த நிலையில், அது இப்போது முறியடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நாளொன்றுக்குச் சராசரியாக ₹65,966 கோடி மதிப்பிலான 44.3 கோடி பரிவர்த்தனைகள் செய்திருப்பதும் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

News June 2, 2024

அருணாச்சலில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக

image

அருணாச்சலில் முதல்வர் பெமா காண்டு தலைமையிலான ஆளும் பாஜக, பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால் மீண்டும் ஆட்சியமைக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், 42 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஏற்கெனவே, 10 பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேசிய மக்கள் கட்சி 6 இடங்களிலும், காங்., 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

News June 2, 2024

வெள்ளிப்பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை நித்யா

image

சர்வதேச ஓபன் தடகள கான்டினென்டல் போட்டியில், தமிழக வீராங்கனை நித்யா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தைவானில் பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டம் நேற்று நடந்தது. அதில், இந்தியா சார்பில் பங்கேற்ற நித்யா, 13.23 வினாடியில் ஓடி, 2ஆவது இடம் பெற்று, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் விஸ்மாயா, 53.49 வினாடியில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப்பதக்கத்தை தன் வசப்படுத்தினார்.

News June 2, 2024

தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறும்

image

தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு ஆதரவான அலை வீசுகிறது எனக் கூறிய அவர், 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்றார். இன்னும் 3 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 3ஆவது இடத்துக்கு உயர்வோம் என்ற கேரண்டியை பாஜக காப்பாற்றும் எனத் தெரிவித்தார்.

News June 2, 2024

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற மானு

image

சர்வதேச ஓபன் தடகள கான்டினென்டல் போட்டியில், இந்திய வீரர் டி.பி.மானு (24) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தைவானில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில், இந்தியா சார்பில் பங்கேற்ற
கர்நாடகாவைச் சேர்ந்த மானு 81.58 மீட்டர் தூரம் எறிந்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இருப்பினும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கை (85.50 மீட்டர்) எட்டிப்பிடிக்காததால், அவரால் அப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.

News June 2, 2024

திமுக கூட்டணிக்கே அனைத்து கணிப்புகளும் சாதகம் (3/3)

image

Matrize- Republic bharat வெளியிட்ட கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 35-38 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 0-3 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 0-1 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாணக்யா – நியூஸ் 24 வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணி 24-33 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 6-14 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 0-2 தொகுதிகளிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

News June 2, 2024

திமுக கூட்டணிக்கே அனைத்து கணிப்புகளும் சாதகம் (2/3)

image

சி-வோட்டர்-ஏபிபி கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 0-2 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பிற கட்சிகள் எந்தத் தொகுதிகளிலும் வெற்றி பெறாது எனவும் கூறப்பட்டுள்ளது. ETG-Times now வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், திமுக கூட்டணி 34 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி 3 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 2, 2024

திமுக கூட்டணிக்கே அனைத்து கணிப்புகளும் சாதகம் (1/3)

image

Axis-India Today ஆகியவை வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளில், திமுக கூட்டணி தமிழகத்தில் 33-37 வரையிலான இடங்களை வெல்லக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 2-4 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 0-2 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. சி-வோட்டர்-ஏபிபி வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணி 37-39 தொகுதிகளை கைப்பற்றும் எனக் கூறியுள்ளது.

News June 2, 2024

T20 WC: ஆரம்பமே அசத்தல்

image

டி20 உலகக் கோப்பை தொடரின் அமெரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் கனடா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், கனடா அணி முதலில் களமிறங்கியது. நவ்நீத் தலிவால்(61), நிக்கோலஸ் கிர்டன் (51) அரைசதம் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர். அமெரிக்க பந்துவீச்சாளர்களில் அலிகான், ஹர்மீத், கோரி ஆண்டர்சன் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

News June 2, 2024

தமிழகத்தில் இனி திமுக VS பாஜக அரசியல்?

image

தமிழக அரசியல் என்றாலே திமுக, அதிமுகதான் என்ற கருத்து சுமார் 50 ஆண்டுகளாகவே உள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகள், திமுக கூட்டணி, பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கின்றன. இதுபோல நடந்தால் இனி திமுக Vs அதிமுக அரசியல் என்ற நிலை மாறி, திமுக Vs பாஜக அரசியல் என்ற நிலை உருவாகக்கூடும், அந்த 2 கட்சிகளுடன் பிற கட்சிகள் கூட்டணி வைக்கும் நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!