India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
EPFO பயனாளர்கள் தங்கள் KYCஇல் இருக்கும் தவறுகளை ஆன்லைன் மூலமாக திருத்தம் செய்யலாம் என மத்திய தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, PF பயனாளர் தனது பெயர், பாலினம், ஆதார் எண், பெற்றோரின் பெயர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இனி ஆன்லைனில் எளிதாக திருத்திக் கொள்ள முடியும். ஆனால், தக்க சான்றுகளை பதிவேற்றம் செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு குறித்து பிரகாஷ் ராஜ் கூறியது நகைப்பை ஏற்படுத்துவதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வரலாற்றை எண்ணி பார்க்காமல் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், 69% இடஒதுக்கீட்டை போராடி சட்டமாக்கியவர் ஜெயலலிதா தான் என்றார். முன்னதாக, 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கருணாநிதி தான் என பிரகாஷ் ராஜ் தெரிவித்திருந்தார்.
சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றிய பிரேம் சிங், சமூக பணியாற்ற அரசியலுக்குள் நுழைந்தார். சாம்லிங் தலைமையிலான SDF அமைச்சரவையில் அங்கம் வகித்த அவர், முதல்வருடன் ஏற்பட்ட கருத்து மோதலால், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்ற கட்சியை 2013இல் தொடங்கினார்.
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா, பாஜகவின் அம்ரிதா ராய்யிடம் தோல்வியை தழுவுவார் என TIMES NOW செய்தி ஊடகம் கணித்துள்ளது. ஹைதராபாத் தொகுதியில் ஓவைசி வெற்றி பெறுவார் எனவும், உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக வேட்பாளர் சுப்ரத் பகத்திடம் வெற்றியை பறிகொடுப்பார் எனவும் TIMES NOW கணித்துள்ளது.
இடது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பினார். கடந்த 7 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், அடுத்த 10 நாட்களுக்கு வைகோவை கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என மதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருந்த காங்., கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறியுள்ளது. குறிப்பாக, சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்., நோட்டாவுக்கு கீழ் சென்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 1994 தேர்தலில் 15% வாக்குகள், 2004 தேர்தலில் 26.13% வாக்குகளை பெற்றிருந்த காங்., படிப்படியாக குறைந்து, தற்போது நோட்டாவுக்கு கீழ் சரிந்துள்ளது. அதே நேரம், பாஜகவின் வாக்கு வங்கி 5%ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடும் வெப்ப அலை வீசி வருவதால், வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, டெலிவரி வேலை செய்பவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்நிலையில், நண்பகல் நேரத்தில் உணவு ஆர்டர் செய்வதை தவிர்க்கும் படி, வாடிக்கையாளர்களுக்கு சொமேட்டோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அவசியம் இருந்தால் மட்டும் நண்பகலில் ஆர்டர் செய்ய வலியுறுத்தியுள்ளது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல், அப்போதைய பாஜக அரசை 40% கமிஷன் அரசு என விமர்சித்தார். தவறான தகவல்களை ராகுல் மக்களிடம் கூறியதாக பாஜக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், ஜூன் 7ஆம் தேதி நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இமாச்சல் மாநிலம் மண்டி தொகுதியில் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர் கங்கனா ரனாவத், காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கிடம் தோல்வி அடைவார் என TIMES NOW செய்தி ஊடகம் கணித்துள்ளது. அதே போல, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியிடம், பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் தோல்வியடைவார் என கணிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஒரு கட்சிக்கு ஆதரவாக வந்தாலும், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக வந்த வரலாறு பல இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. *பொது வெளியில் தாங்கள் ஆதரித்த கட்சியை வாக்காளர்கள் மாற்றி குறிப்பிட வாய்ப்புள்ளது. *கருத்துக்கணிப்பில் பங்குபெறும் வாக்காளர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. *பல நிறுவனங்கள் கட்சிகளின் ஆதரவோடு கருத்துக்கணிப்புகளை நடத்துகின்றன.
Sorry, no posts matched your criteria.