India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
INDIA கூட்டணியில், முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ், தேஜஸ்வி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், 2 மாதத்திற்கு முன்பே வீட்டில் தயாரிக்கப்பட்டது என விமர்சித்த அவர், அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை என்றார். மேலும், INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால், CPM தலையிடாதவரை அந்த அரசில் நாங்கள் பங்கேற்க எந்தத் தடையும் இருக்காது என அவர் தெரிவித்தார்.
▶ஜூன் – 3 ▶வைகாசி – 21 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM, மாலை 4:30 PM – 5:30 PM வரை ▶கெளரி நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM, 07:30 PM – 08:30 PM வரை ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM வரை ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM வரை ▶குளிகை: 01:30 PM – 03:00 PM வரை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ திதி: துவாதசி
சுந்தர்.சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 படம், சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பேய் கதையை மையாக கொண்டு உருவான இந்தப் படத்தில் தமன்னா, ராஷிகண்ணா, சுந்தர்.சி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில், அரண்மனை 4 படம், டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் OTT தளத்தில் விரைவில் ரிலீசாக உள்ளதாக, நடிகை குஷ்பு தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 2 வாக்குச் சாவடிகளில் இன்று மறு தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1இல் நடைபெற்ற 7வது கட்டத் தேர்தலின்போது பரசாத், மதுராபூர் தொகுதிகளில் உள்ள 2 வாக்குச் சாவடிகளில் வன்முறை நிகழ்ந்ததால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, அந்த 2 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என பழமொழி கூறப்படுவதுண்டு. அந்த வகையில், கோடைகாலத்தில் கரும்புச் சாறை அதிகம் பருகுவது ஆபத்து என ICMR கூறியுள்ளது. பொதுவாகவே, கரும்பில் இருந்துதான் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சர்க்கரை அளவை அதிகம் கொண்டுள்ள கரும்புச் சாறை அதிகளவில் குடிப்பதால், பின்நாள்களில் உடல்நிலை சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ICMR எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவைவிட (0.99%), காங்கிரஸின் (0.32%) வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், தற்போது நோட்டாவுடன் போட்டி போடும் நிலைக்கு சென்றுவிட்டதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் ராகுல், பிரியங்கா ஓடி ஓடி பிரசாரம் செய்தாலும், அது மக்கள் மத்தியில் பலிக்கவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுவதாக சிலர் கூறி வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டில் தனது வெற்றிகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் அதனை மறந்துவிட்டு அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுவிடுவேன். அதே நேரத்தில், கடினமாக நேரங்களில் ஓடி ஒளியாமல் அனைத்தையும் தலைநிமிர்ந்து எதிர்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணி 0-2 தொகுதிகளில் வெல்லும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. ஆனால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான NEWS J நடத்திய கருத்துக்கணிப்பில், அதிமுக கூட்டணி 24 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கூறியுள்ளது. இதனால், பிற ஊடகங்களின் கணிப்பு தவறா என ஒரு தரப்பும், அதிமுகவினரிடம் மட்டும் NEWS J கருத்துக்கணிப்பு நடத்தியதா என மற்றொரு தரப்பும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
1834 – இலங்கை கொழும்புவில் புறக்கோட்டை, கோட்டை பகுதிகளில் காணிகளை வாங்க தமிழர், சோனகருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின.
1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
1984 – புளூஸ்டார் நடவடிக்கை: அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற்கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.
உலகக் கோப்பை டி20 தொடர், அமெரிக்காவில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற போட்டியில் USA, WI அணிகள் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதைத் தொடர்ந்து இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெற உள்ளன. காலை 6 மணிக்கு நடைபெற உள்ள முதல் போட்டியில், ஆப்கன்-உகாண்டா அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு இங்கிலாந்து-ஸ்காட்லாந்து அணிகளும், இரவு 9 மணிக்கு நெதர்லாந்து-நேபாள் அணிகளும் மோதுகின்றன.
Sorry, no posts matched your criteria.