News June 3, 2024

+1 துணைத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

image

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியானது. இத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூலை 2இல் துணைத்தேர்வுகள் நடக்க உள்ளது. இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஜூலை 2- மொழிப்பாடம், ஜூலை 3 ஆங்கிலம், ஜூலை 4- இயற்பியல், பொருளாதாரம், ஜூலை 5- கணினி, ஜூலை 6- தாவரவியல், வரலாறு, ஜூலை 8- கணிதம், வணிகவியல் ஜூலை 9- வேதியியல், கணக்கியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.

News June 3, 2024

T20 உலகக் கோப்பையில் புதிய சாதனை

image

கனடாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில், அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 4 Four, 10 Six என விளாசி 94*(40) ரன்கள் குவித்தார். இதனால், டி20 உலகக் கோப்பையில் சேஸிங்கில் அதிக ரன்கள் குவித்த Non-Opening பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்கா வீரர் கெம்ப் அடித்த 89 ரன்களே அதிகபட்சமாகும்.

News June 3, 2024

ஏசியில் நிம்மதியாக உறங்கிய திருடன்

image

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் திருடச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய திருடனை போலீசார் கைது செய்தனர். பாண்டே என்பவரது கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அக்கம் பக்கத்தினர் அவருக்கு ஃபோன் செய்தனர். அவர் போலீசாருடன் வந்து பார்த்தபோது, ஏசியை போட்டுவிட்டு, தலைகாணியை தலைக்குக் கொடுத்து வசதியாக தூங்கியிருக்கிறான் திருடன். அவன் அப்போது போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

News June 3, 2024

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு

image

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, தேடுதல் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே திடீரென துப்பாக்கிச்சூடு ஏற்பட்டது என்றும், இரு தரப்பிலும் உயிரிழப்பு எதுவுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்?

image

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது நாளை தெரிந்துவிடும். அது மோடியாகவே இருந்தாலும் சரி, வேறு யாரேனும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரி முதல் கையெழுத்து என்னவாக இருக்கப் போகிறது என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசியல் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மிக முக்கிய விவகாரத்தில் கையெழுத்திடுவது வழக்கம். அது என்ன விவகாரமாக இருக்க வேண்டும்? கமெண்ட்டில் சொல்லுங்க.

News June 3, 2024

APPLY NOW: 459 காலிப் பணியிடங்கள்

image

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளையே கடைசி நாளாகும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், இந்தியாவில் உள்ள ராணுவப் படை, கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் காலியாக உள்ள 459 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பொறியியல் படித்தவர்கள் <>upsc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News June 3, 2024

தொங்கு நாடாளுமன்றம் என்றால் என்ன? (3/3)

image

1999 தேர்தலில் பாஜக கூட்டணி மெஜாரிட்டி இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. அந்த அரசு 2004 வரை நீடித்தது. பின்னர் மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் அமையவில்லை. ஏனெனில், வாஜ்பாய் அரசுக்கு பிறகு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 10 ஆண்டுகளும், மோடி அரசு 10 ஆண்டுகளும் மெஜாரிட்டியுடன் ஆட்சியமைத்தன. இந்த முறை எப்படி இருக்கும் என்பதை நாளைய (ஜுன் 4) வாக்கு எண்ணிக்கையே தீர்மானிக்கும்.

News June 3, 2024

தொங்கு நாடாளுமன்றம் என்றால் என்ன? (2/3)

image

1996இல் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால், தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது. வாஜ்பாய், தேவ கவுடா, குஜ்ரால் என 2 ஆண்டுகளில் 3 பேர் பிரதமராகினர். குஜ்ரால் அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றதால், 1998இல் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும் தொங்கு நாடாளுமன்றமே ஏற்பட்டது. இதையடுத்து தெலுங்கு தேசம் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமரானார். அதிமுக ஆதரவை வாபஸ் பெற்றதால் ஓராண்டில் அரசு கவிழ்ந்தது.

News June 3, 2024

தொங்கு நாடாளுமன்றம் என்றால் என்ன? (1/3)

image

மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்க முடியும். அதுபோல இடம் கிடைக்கவில்லையெனில் அது தொங்கு நாடாளுமன்றம் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மீண்டும் தேர்தல் நடைபெற்று வரிப்பணம் வீணாவதை தவிர்க்க அதிக இடங்களில் வென்ற கட்சி அல்லது கூட்டணித் தலைவரை அழைத்து குடியரசுத் தலைவர் பேசுவார்.

News June 3, 2024

வெள்ளியங்கிரி மலையேற அதிக ஆர்வம்

image

சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களைப் பார்த்து வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 3 மாதத்தில் 2.5 லட்சம் மக்கள் மலையேறியிருக்கின்றனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2 லட்சம் பக்தர்கள் மட்டுமே மலையேறினர். உரிய பாதுகாப்பு இல்லாமலும் பயிற்சி இல்லாமலும் மலையேறிய பக்தர்களில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

error: Content is protected !!