India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சிலர் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்க முயற்சிக்கின்றனர். பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் டாஸ்மாக்கில் தனி நபருக்கு அதிகளவில் மதுபாட்டில் விற்கக்கூடாது. இன்று இரவு 10 மணிக்கு பதில் முன்னதாகவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
7,755 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 2024 கணக்கீடு படி, மொத்த 2,000 ரூபாய் தாள்களில் 97.82% நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ளது. வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றுவதற்கான கால அளவு முடிந்து 8 மாதங்களான நிலையில், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.
வட இந்தியாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்துள்ளதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வழக்கமாக 47 டிகிரி செல்சியஸை தாண்டாத வெயில், இம்முறை 52 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. இதன் எதிரொலியாக, Heatstroke ஏற்பட்டு ஒடிஷாவில் 99 பேரும், உத்தர பிரதேசத்தில் தேர்தல் பணியாளர்கள் 33 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், டெல்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டும் என மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்று எண்ணிக்கைக்கு முன், தபால் வாக்கு எண்ணிக்கையின் மொத்த விவரங்கள் வெளியாகும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதியுடன் முடிவுபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
தபால் வாக்குகள் தொடர்பான ஆந்திர தேர்தல் அதிகாரியின் சுற்றறிக்கையை எதிர்த்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தபால் வாக்கு படிவத்தில் சான்றளிக்கும் அதிகாரியின் பதவி குறிப்பிடாமல், கையொப்பம் மட்டும் இருந்தாலே, அந்த வாக்கு செல்லும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இது மோசடிக்கு வித்திடும் என ஒய்எஸ்ஆர் காங்., வழக்கு தொடுத்திருந்தது.
ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, உலகக் கோப்பையில் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜெய்ஸ்வாலின் தற்போதைய ஃபார்ம் வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், கோலி தொடக்க வீரராக ஆடும் பட்சத்தில் ஜெய்ஸ்வால் தனது வாய்ப்புக்காக பொறுமையாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். T20 WCஇல் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
பாதத்தின் மேல்பகுதி, கீழ் பகுதியில் ஏற்படும் வீக்கம் தானாக சரியாகிவிடும். ஒருவேளை சரியாகவில்லையெனில், கீழ்காணும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் சரியாக வாய்ப்புள்ளது. *நாள்தோறும் அதிக நீர் அருந்த வேண்டும் * ஐஸ் பேக் ஒத்தடம் கொடுக்கலாம் *உட்காருகையில், படுக்கையில் கால்களை உயர்த்தி வைக்கலாம் *வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து, பாதத்தை சிறிது நேரம் வைத்தால் வீக்கம் குறையக்கூடும்.
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று (ஜூன் 2) தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது மனைவியும் குழந்தையும் நலமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், தனது மகள் ஆராதனாவிற்கும், மகன் குகனிற்கும் வழங்கிய அன்பை, தனது மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். மூன்றாவது முறையாக தந்தையான சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், தேனி, கோவை, நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.