News June 4, 2024

திருத்தணி முருகன் கோவிலில் ரோஜா சாமி தரிசனம்

image

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற, மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வேண்டும் என நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தார். ஆந்திராவில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தொண்டர்களுடன் வந்த ரோஜா, அங்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தொடர்ந்து ரோஜாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News June 4, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News June 4, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶மக்களவைத் தேர்தலில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ஓ.பி.எஸ்
▶வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்: மின்சார வாரியம் வலியுறுத்தல்
▶தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு
▶தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பொய்க்கும்: சோனியா காந்தி
▶ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது: ஜெயக்குமார்
▶T20 WC: நமீபியா அணி வெற்றி

News June 4, 2024

இன்று ஒரு இடத்தில் கூட 100 டிகிரி இல்லை

image

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகிவந்த நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு இடத்தில் கூட 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகவில்லை. அதிகபட்சமாக ஈரோட்டில் 98.6, நுங்கம்பாக்கம் – 96.8, கரூர் பரமத்தி – 97.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

News June 4, 2024

டி20 உலகக் கோப்பை தான் எனது கடைசி தொடர்

image

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதை ராகுல் டிராவிட் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடப்பு டி20 உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும், புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கௌதம் கம்பீரை தலைமை பயிற்சியாளராக்க பிசிசிஐ முயற்சித்து வருகிறது.

News June 4, 2024

133 ஆண்டுகளுக்குப் பின் வெளுத்து வாங்கிய கனமழை

image

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நேற்று வரலாறு காணாத மழை பெய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 111.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 133 ஆண்டுகளுக்குப் பின் ஜூன் மாதத்தில் அதிகபட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. முன்னதாக, கடந்த 1891ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி பெங்களூருவில் 101.6 மி.மீ மழை பதிவானது குறிப்பிடதக்கது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், பல இடங்கள் வெள்ளக்காடானது.

News June 4, 2024

தென்னிந்திய சினிமாவில் நிலைமை வேறாக உள்ளது

image

தென்னிந்திய சினிமாவில் திருமணமான நடிகைகளை ஓரங்கட்டுவதாக காஜல் அகர்வால் வேதனை தெரிவித்துள்ளார். இந்தி சினிமாவில் திருமணத்திற்குப் பின்னும் தீபிகா படுகோனே, ஆலியா பட் போன்ற நடிகைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறிய அவர், தென்னிந்தியாவில் அத்தகைய வாய்ப்பு நயன்தாராவுக்கு மட்டுமே கிடைப்பதாக கூறியுள்ளார். மேலும், தங்களின் இந்த நிலை விரைவில் மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

கெஜ்ரிவாலுக்கு ஏர் கூலர் வழங்கவில்லை

image

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிறையில் ஏர் கூலர் வழங்கவில்லை என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பேசிய டெல்லி அமைச்சர் அதிஷி, பாஜகவின் போலி வழக்கால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், திகார் சிறையில் மீண்டும் சரணடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் 50 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மோசமான குற்றவாளிகளுக்கு கூட கூலர் வழங்கும் போது, கெஜ்ரிவாலுக்கு வழங்கவில்லை என்றார்.

News June 3, 2024

நீட் வினாத்தாள் கசிவு: மீண்டும் தேர்வு நடத்த கோரிக்கை

image

நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை, மீண்டும் புதிதாக நடத்தக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து மனு அளிக்கப்பட்டுள்ளது. 2024 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள், ஜூன் 14ல் எதிர்பார்க்கப்படும் நிலையில் மாணவர்கள் வலியுறுத்தல்.

News June 3, 2024

தயார் நிலையில் வாக்கு எண்ணும் பணி

image

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணி தயார் நிலையில் உள்ளதாகவும், இதற்காக பயிற்சி பெற்ற 40,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும், பின்னர் இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!