India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில், அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகார அட்டை வழங்கப்பட்ட பணியாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்குள், பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி உபயோகிக்க அனுமதி கிடையாது. இவர்களை சீர் செய்வதற்காக, கம்புகளால் வரிசைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் மற்றும் நகரும் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி, 39 மையங்களில் நடைபெற உள்ளன. இந்த மையங்களில் 1 சட்டமன்ற தொகுதிக்கு 1 அறை வீதம், 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் வீதம், 3,300 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். தேவையான இடங்களில் 14க்கும் அதிகமான மேஜைகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுற்று வாரியாக வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படும்.
1919 – பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டத்துக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது.
1920 – ஹங்கேரி தனது 71% நிலத்தையும், 63% மக்களையும் இழந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: டைனமோ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: மிட்வே தீவுகள் மீது ஜப்பான் தாக்குதலை தொடங்கியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ரோம் நகரம் நேச நாடுகளிடம் வீழ்ந்தது.
1970 – ‘தொங்கா’ பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது.
மக்களவைத் தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை, மம்தா பானர்ஜி காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கருத்துக் கணிப்பு முடிவுகள், ஊடக நிறுவனங்கள் தங்களது ஆதாயத்திற்காக 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபடி தயாரிக்கப்பட்டவை. இதற்கு எவ்வித மதிப்பும் இல்லை. 2016, 2021 சட்டப்பேரவை கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன ஆனது என்பதை நாம் பார்த்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 139
▶குறள்: ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
▶பொருள்: தெரியாமல் கூட நம் வாயால் தகாத வார்த்தைகளை சொல்ல கூடாது. து, ஒழுக்கம் உடையவர்களின் பண்பு இல்லை.
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும் என ஜனாதிபதி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், தேர்தலில் பாஜக அரசு தோல்வியடைந்தால் ஆட்சி மாற்றம் சுமுகமாக இருக்காது. சட்ட விதிகளுக்கு எதிரான செயல்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை சுமுகமாக வெகுளிஃ
இன்று ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு, சட்டசபை தேர்தலின் வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. இதனையொட்டி அம்மாநிலத்தின் சட்டசபையை கலைக்க கவர்னருக்கு அம்மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. அதன்படி ஆளுநர் ரகுபர் தாஸ் நவீன் பட்நாயக் தலைமையிலான சட்டசபையை கலைத்து நேற்றிரவு உத்தரவிட்டார். நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு கடந்த 2019ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்கா வீரர் அன்ரிச் நோர்ட்ஜே புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகக்குறைவான எகானமி ரேட்டுடன் (1.75) பந்துவீசிய முதல் பவுலர் என்ற பெருமையை பெற்றார். மேலும், போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று (ஜூன் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். பாஜக ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்த உடன் மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. கட்டணத்தைத் திரும்பப் பெறவில்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களே அந்தந்த சுங்கச்சாவடிகளில் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.