News June 4, 2024

பாஜக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்: நமிதா

image

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் வாக்களித்தது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை நமிதா கூறியுள்ளார். புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், 2019இல் பாஜகவில் தான் சேர்ந்த போது தவறான முடிவு எடுத்துவிட்டதாக பலரும் தெரிவித்ததாகவும், ஆனால், தற்போது சரியான முடிவை எடுத்ததாக உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும், பாஜக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும், வேறு வழியில்லை எனக் குறிப்பிட்டார்.

News June 4, 2024

ஒடிஷாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

image

ஒடிஷா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளுக்கு மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடர்ந்து 5 முறை வெற்றிபெற்ற நவீன் பட்நாயக் 6வது முறையாக வெற்றிக்கொடி நாட்டுவாரா? அல்லது VK பாண்டியன் விவகாரத்தை கையில் எடுத்த பாஜக வெற்றிபெறுமா?

News June 4, 2024

காலை 11 மணி முதல் முன்னணி நிலவரம்

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி முதல் முன்னணி நிலவரங்கள் தெரியவரும். வாக்குகள் எண்ணப்படும் அறையில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, 19 – 24 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும், வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் எவ்வளவு என்பது அறிவிக்கப்படும். மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்றும் இன்றே தெரிந்துவிடும்.

News June 4, 2024

கர்நாடகத்தில் காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெறும்

image

கர்நாடகத்தில் காங்கிரஸ் குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கர்நாடகத்தில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டதை முற்றிலுமாக நிராகரித்த அவர், சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் பெற்ற வெற்றியை, மக்களவைத் தேர்தலிலும் தக்க வைப்போம் எனக் கூறினார்.

News June 4, 2024

வாகை சூடப்போவது யார்? (1/2)

image

இந்திய ஜனநாயகப் போரில் வெற்றி வாகை சூடப்படுவது யார் என்பதை ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. என்.டி.ஏ., கூட்டணி சார்பில் மோடியும், INDIA கூட்டணியில் ராகுலும் (மறைமுகமாக) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.76 நாள்களில் குமரியில் தொடங்கி காஷ்மீர் வரையில் இருதரப்பும் தத்தமது படை, பரிவாரங்களுடன் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, களத்தில் தேர்தல் பிரசாரங்கள் வழியே சமர் புரிந்தனர்.

News June 4, 2024

ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

image

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள 175 தொகுதிகளுக்கு 13மே ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில், ஜெகன் மோகனின் YSR காங்., கட்சி தனித்தும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும்., பவன் கல்யாணின் ஜன சேனாவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. ஜெகன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வாரா? அல்லது சந்திரபாபு ஆட்சியைக் கைப்பற்றுவாரா?.

News June 4, 2024

தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

image

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், தபால் வாக்குகள் செலுத்தப்பட்ட பெட்டிகளின் சீல் அகற்றப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து, EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தபால் வாக்குகள் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை எண்ணப்படுவது, குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

டி.ஆர்.பாலு காருக்கு அனுமதி மறுப்பு

image

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று கலை 8 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல முயன்ற நிலையில், அங்கிருந்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். காருடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறியதால், திமுகவினர் அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சலசலப்பு நிலவி வருகிறது.

News June 4, 2024

வாகை சூடப்போவது யார்? (2/2)

image

இந்த ஜனநாயகப் போரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் நடுவர்களாக 64 கோடி இந்திய மக்களும் 7 கட்ட வாக்குப் பதிவில் ஆட்காட்டி விரல் மூலம் தங்களது விருப்பத்தை தெரிவித்துவிட்டனர். அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவை ஆளப்போவது யார்? வெற்றி வாகை சூடப்போவது யார்? பாஜக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணியா? 37 எதிர்க்கட்சிகளின் தலைமையிலான INDIA கூட்டணியா? என்பதை இன்று நடக்கும் ஓட்டு எண்ணிக்கை துல்லியமாக விடை சொல்லிவிடும்.

News June 4, 2024

தமிழகத்தில் வலுவாக காலூன்றுமா பாஜக?

image

தேர்தலில் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் பாஜக போட்டியிட்டது. இதில் அண்ணாமலை, எல். முருகன், தமிழிசை, ராதிகா சரத்குமார், பொன் ராதா கிருஷ்ணன் போட்டியிடும் 5 தொகுதிகளில் வெற்றி உறுதி என அக்கட்சி நம்புகிறது. அவ்வாறு பாஜக வெற்றி பெற்றால், அது தமிழகத்தில் பாஜகவின் தனிப்பெரும் சாதனையாக கருதப்படும். பாஜகவின் கணிப்பு பலிக்குமா? இல்லையா? என்பது இன்று தெரிந்து விடும்.

error: Content is protected !!