India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மார்பக, நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களுக்கு இந்த பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் நவ. 7-ம் தேதி இந்திய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் இந்த நாளில், விழிப்புணர்வு மட்டுமின்றி, புற்றுநோயை எதிர்கொள்ளும் சமூக மனப்பாங்கை உருவாக்கும் ஒரு நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை இன்று(நவ.7) சவரனுக்கு ₹400 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,270-க்கும், சவரன் ₹90,160-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹165-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,65,000-க்கும் விற்பனையாகி வருகிறது. நேற்று சவரனுக்கு ₹1,120 உயர்ந்த நிலையில், இன்று ₹400 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பங்குச்சந்தைகள் 2-வது நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். சென்செக்ஸ் 479 புள்ளிகள் சரிந்து 82,831 ஆகவும், நிஃப்டி 131 புள்ளிகள் சரிந்து 25,378 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றன. NTPC, TCS, Tech Mahindra, Kotak Mahindra உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன. நீங்கள் வாங்கிய SHARE உங்களுக்கு லாபம் தந்ததா?

உள்ளூர் மொழி தெரியாத ஊழியர்களால் வங்கிகளில் சில பிரச்னை ஏற்படுவதை பார்த்துள்ளோம். இந்நிலையில், வங்கி ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று FM நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். வாடிக்கையாளரை புரிந்து கொள்ள உள்ளூர் மொழி பேசுவது அவசியம் என்று கூறியுள்ள அவர், குறைந்தபட்சம் கிளை மேனேஜராவது வட்டார மொழி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு T20 உலகக் கோப்பை, இந்தியா & இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் போட்டிகளை நடத்த, 5 நகரங்கள், அதாவது அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை & மும்பை ஆகிய நகரங்களை BCCI தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இறுதி போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இத்தொடர் பிப்ரவரி 7, 2026-ல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவரின் X தள பதிவில், பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும், பன்முகத்தன்மை மிக்க நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டுள்ள கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்து என வாழ்த்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்களை கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கி EPS அறிவித்துள்ளார். செங்கோட்டையனின் உறவினரான Ex MP சத்யபாமா உடன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன்(கோபி மேற்கு ஒன்றியம்), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன்,Ex ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் SS ரமேஷ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

கிளப்ஹவுஸ் செயலியில் உரையாடிக்கொண்டிருந்த போது பாடகி சின்மயியின் குழந்தைகள் இறக்க வேண்டும் என சிலர் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், தனது குழந்தைகளுக்கு எதிராக சிலர் வெறுப்பை பரப்பி வருவதாக ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி.சஜ்ஜனாரிடம் சின்மயி X-ல் புகாரளித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு தேவையான நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தால் நிதி வராது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு நன்மை இல்லை என்று கூறிய அவர், மத்திய – மாநில அரசுகளின் உறவு நன்றாக இருந்தால் தான் மத்திய அரசின் நிதி இங்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் கருத்து என்ன?

பிரபல பாலிவுட் நடிகையும், பாடகியுமான சுலக்ஷனா பண்டிட்(71) மாரடைப்பால் காலமானார். 9 வயதில் மழலை குரலில் பாட தொடங்கியவர், பிறகு பாலிவுட் ரசிகர்களை தனது குரலால் கட்டிப்போட்டார். பாடகியாக மட்டுமின்றி, 1970 முதல் 1980-களில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ராஜேஷ் கன்னா, வினோத் கண்ணா, சசி கபூர் போன்றோரின் படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.