India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் 37,477 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 29,242 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் 13,258 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி 6,977 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மியான் அல்டாப் அகமது 2.17 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மெஹபூபா முப்தி 96 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று 1.20 லட்சம் வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் 22,536 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
சுர்ஜித் சங்கர் (அதிமுக) – 14,014 வாக்குகள்
கார்த்திகா (நாதக) – 5,040 வாக்குகள்
ரமேஷ் (பாஜக) – 3,402 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
கேரள மாநிலம் இடதுசாரி கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. அங்கு இடதுசாரி கூட்டணி 2ஆவது முறையாக ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதன் கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. வலதுசாரியாக அறியப்படும் பாஜக 2 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதன் மூலம் இடதுசாரிகளின் கோட்டைக்குள் ஊடுருவும் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடக்கும் நிலையில், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னெப்போதும் இல்லாததை விட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தெலங்கானா மாநிலத்தில் 8 தொகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தில் 17 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆந்திராவில் 3 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
➤ஹரியானா – 7 ➤ராஜஸ்தான் – 14 ➤குஜராத் – 21 ➤ஒடிஷா – 17 ➤மஹாராஷ்டிரா – 29 ➤தமிழ்நாடு – 38 ➤பஞ்சாபி – 6 ➤டெல்லி – 6 ➤கேரளா – 17 ➤பிஹார் – 8 ➤ஜார்க்கண்ட் – 12 ➤மேற்கு வங்கம் – 2 ➤உ. பி – 43 ➤கோவா – 1 ➤தெலங்கானா – 8 ➤கர்நாடகா – 8 ➤மணிப்பூர் – 1 ➤குஜராத் – 1 ➤கேரளா – 2 ➤ஜம்மு & காஷ்மீர் – 2 ➤அசாம் – 4 ➤சண்டிகர் – 1 ➤ஒடிஷா – 1 ➤சட்டிஸ்கர் – 1 ➤மேகாலயா – 1 ➤ஆந்திரா – 21 ➤லட்சத்தீவு – 1
மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 242 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் தனித்து 93 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. என்டிஏ கூட்டணி 280க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணியாக 220க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது. ஆர்எஸ்பி, கேஇசி ஆகியவை தலா 1 தொகுதியிலும், முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. வாக்கு முன்னிலை நிலவரத்தை வைத்து பார்க்கும் போது பாஜக 2 தொகுதிகளில் வெல்வது உறுதி போல் தெரிகிறது. அப்படி வென்றால், கேரளாவில் முதல்முறையாக 2 தொகுதிகளில் வென்று பாஜக காலூன்றும்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 58,905 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 28,902 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், தமாகா வேட்பாளர் வேணு கோபால் 12,740 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக 81,178 வாக்குகள் பெற்று, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசம் உள்ள தொகுதியாக தஞ்சாவூர் மாறியுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. தேமுதிக 36, 190, பாஜக 25,736, நாதக 22,947 வாக்குகளும் பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.