India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 68,995 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 58,652 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் பசுபதி 27,740 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவையில் அக்கட்சி 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது, தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் இருக்கிறார். 2ஆவது இடத்தில் அண்ணாமலையும், 3ஆவது இடத்தில் அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரனும் உள்ளனர். இதனால் கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கை இழக்கிறதோ எனத் தோன்றுகிறது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், விசிக வேட்பாளர் ரவிக்குமார் 68,995 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் 58,652 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் முரளி சங்கர் 27,740 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், அக்கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளன. தற்போது வரை அனைத்து தொகுதிகளிலும் பாஜக 1500- 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி வென்று, காங்கிரஸ் 150 தொகுதிகளில் வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார் என்று உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் மேல் காங்கிரஸ் வென்றாலே INDIA கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி என்றும், ராகுல் காந்தி பிரதமராவார், இதைத்தான் மக்கள் விரும்புகின்றனர் என்றார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளன. புதுச்சேரி, தென்காசி, வடசென்னை, மத்திய சென்னை, தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
ஆந்திர அரசியல் வரலாற்றில் திடீர் திருப்பமாக நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் எதிர்கட்சித் தலைவராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவரது கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், ஆளும்கட்சியாக இருக்கும் YSR காங்., 15 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் பவன் கல்யாண் கட்சி 2ஆம் இடத்தைப் பிடித்து எதிர்க் கட்சியாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் செல்வம் 94,925 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 61,602 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேஷ் 26,740 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 3ஆவது பெரிய கட்சி என்ற அந்தஸ்துக்கு பாஜக – நாதக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால், இதுவரை வெளியான தேர்தல் முன்னணி நிலவரப்படி பாஜக பல இடங்களில் 3ஆவது இடத்தையும், சில இடங்களில் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அதேசமயம், நாம்தமிழர் வாக்கு வித்தியாசமும் கணிசமாக குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வாக்கு வித்தியாசத்தில் அக்கட்சி தொடர்ந்து 4ஆவது இடத்தில் உள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிக்கியவர் முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷன் சிங். இதன் காரணமாக அவருக்கு பதிலாக அவரது மகன் கரன் பூஷன் சிங்குக்கு கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, கரன் பூஷன் சிங் மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.