India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.29 லட்சம் வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 83,058 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 50,820 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் மணிவாசகன் 15,435 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
பஞ்சாப்பின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் காலிஸ்தான் ஆதரவாளரும் ’வாரிஸ் பஞ்சாப் தே’ கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங் போட்டியிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், நாட்டின் இருபெரும் (NDA & INDIA) கூட்டணிகளுக்கு தலைவலி அளிக்கும் போட்டியாளராக களத்தில் உள்ளார். சிறையில் இருக்கும் அவர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. குமரியில் நாம் தமிழர் கட்சி 3ஆவது இடம் பிடித்த நிலையில், அதிமுக 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3ஆவது இடத்தை பிடிக்க போராடி வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்காசியில் நாம் தமிழர் தற்போது வரை 64,000 வாக்குகளை பெற்றுள்ளது.
கர்நாடகாவிலும், தெலங்கானாவிலும் காங்., ஆட்சியமைப்பதற்கு அடித்தளமாக இருந்த சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அவர் ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்தில் உள்ளார். இதனால் அவர், தமிழ்நாடு காங்கிரஸின் எதிர்காலம் என சொல்லப்படுகிறது.
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 5ஆம் சுற்று நிறைவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் மணியை விட 20,421 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். கடலூர் தொகுதியில் போட்டியிடும் சவுமியாவின் சகோதரரும், அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் பாஜக, ஜனசேனா உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அங்கு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதேசமயம், INDIA கூட்டணி அங்கு ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில், தனிப்பெரும் தலைவராக சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அகிலேஷ் யாதவ் உருவெடுத்துள்ளார். பாஜகவுக்கு கடும் போட்டி தரும் வகையில், சமாஜ்வாடி தொடர்ந்து 33 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புல்டோசர் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அகிலேஷுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான மேனகா காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் ராம்பால் நெளசத் போட்டியிட்டார். அவர் 1.28 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்றுள்ளார். மேனகா காந்தி 1.17 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று சுமார் 11,000 வாக்குகள் பின்தங்கியுள்ளார். பகுஜன் சமாஜ் வேட்பாளர் 50,000 வாக்குகள் வாங்கி 3ஆவது இடத்தில் உள்ளார்.
சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வகணபதி 1.09 லட்சம் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 97,425 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாமக வேட்பாளர் அண்ணாதுரை 26,375 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் மனோஜ்குமார் 12,192 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
பஞ்சாப்பில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி 3 தொகுதிகளிலும், ஷிரோமணி அகாலி தளம் 2 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. சிறையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்ட காலிஸ்தானி ஆதவாளர் அம்ரித்பால் உள்ளிட்ட இரு சுயேச்சை வேட்பாளர்கள் இருபெரும் கட்சிகளுக்கும் சிக்கல் அளிக்கும் வகையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.