India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 1,00,487 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
சேவியர் தாஸ் (அதிமுக) – 54,930 வாக்குகள்
தேவநாதன் யாதவ் (பாஜக+) – 39,037 வாக்குகள்
எழிலரசி (நாதக) – 2,750 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
உ.பியில் அயோத்தி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கு சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் முன்னிலை வகித்து வருகிறார். இத்தேர்தலில் அயோத்தி ராமர் கோயில், வெற்றிக்கு கைக்கொடுக்கும் என பாஜக பெரிதும் நம்பிய நிலையில், அக்கோயில் உள்ள பைசாபாத் தொகுதியிலேயே பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது ஏமாற்றம் அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும் எனத் தெரிகிறது. கடந்த தேர்தலில் வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற சமாஜ்வாதி இந்த தேர்தலில் 34 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தில் INDIA கூட்டணி பாதிக்கும் அதிகமாக 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜகவுக்கு அங்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரக்கோணம் தொகுதியில் 5ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 80,235 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் விஜயன் 37,701 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாமக வேட்பாளர் விஜயன் 31,184 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் 1.57 லட்சம் வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 1.20 லட்சம் வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் 62,020 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி 32,096 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
நாக்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போட்டியிட்டார். அவர் 2.22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரசின் விகாஸ் தாக்ரே 1.82 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம் நிதின் கட்கரி, 39 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மேற்குவங்க மாநிலம் அசோன்சோலில் திரிணாமுல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா 36,000 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1.85 லட்சம் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் தங்கவேல் 1.39 லட்சம் வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 33,409 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 33,384 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 94,392 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
மாணிக்கம் தாக்கூர் (காங்கிரஸ்) – 87,390 வாக்குகள்
ராதிகா சரத்குமார் (பாஜக) – 34,463 வாக்குகள்
கெளசிக் (நாதக) – 18,885 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 9இல் பதவியேற்க உள்ளார். ஆட்சியமைக்கத் தேவையான 88 இடங்களைத் தாண்டி, TDP தற்போது 134 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பது, உறுதியாகியுள்ளது. போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 இடங்களில் ஜன சேனா முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்கட்சித் தலைவராக அமரக்கூடும் எனத் தெரிகிறது.
ராமநாதபுரத்தில் போட்டியிட்ட Ex CM ஓபிஎஸ் உள்பட 5 ஓபிஎஸ்-களும் பின்னடவை சந்தித்துள்ளனர். திமுக கூட்டணியில், IMUL வேட்பாளர் நவாஸ் கனி 89,278 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். Ex CM ஓபிஎஸ் 50,323 வாக்குகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். இதேபோல ஒச்சப்பன் பன்னீர்செல்வம் – 416, ஒய்யாதேவர் பன்னீர்செல்வம் – 206, ஒய்யாரம் பன்னீர்செல்வம் – 157, ஒச்சாதேவர் பன்னீர்செல்வம் – 79 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.