News June 4, 2024

தமிழ்நாட்டில் 2ஆவது இடம் பிடித்த பாஜக வேட்பாளர்கள்

image

*கோவை – அண்ணாமலை
*தென் சென்னை – தமிழிசை செளந்தரராஜன்
*மத்திய சென்னை – வினோஜ் பி செல்வம்
*நெல்லை – நயினார் நாகேந்திரன்
*நீலகிரி – எல்.முருகன்
*கன்னியாகுமரி – பொன் ராதாகிருஷ்ணன்

News June 4, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய நயினார்

image

நெல்லை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 1.50 லட்சம் வாக்குகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளார். இந்த நிலையில், காலை முதல் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்துவந்த பாஜக வேட்பாளர் நயினார், திடீரென அங்கிருந்து வெளியேறிச் சென்றார். இதனால், பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News June 4, 2024

சந்திரபாபு நாயுடுவுக்கு காங்கிரஸ் அழைப்பு

image

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. INDIA கூட்டணி 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், காங்கிரஸ், நிதிஷ் குமாருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News June 4, 2024

2 பெரும் மாநிலங்களில் INDIA முன்னிலை

image

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் வகையில், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகளவிலான தொகுதிகளில் INDIA கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்த 2 மாநிலங்கள் மட்டும் 128 தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. அதில் 80 தொகுதிகளைக் கொண்ட உ.பியில் 40 தொகுதிகளிலும், 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 20 தொகுதிகளிலும் INDIA கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

News June 4, 2024

மீண்டும் எம்.பி ஆகிறார் சு.வெங்கடேசன்?

image

மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் (சிபிஎம்) – 2,41,805 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

சரவணன் (அதிமுக) – 1,20,357 வாக்குகள்
ராம சீனிவாசன் (பாஜக) – 1,17,593 வாக்குகள்
சத்யா தேவி (நாம் தமிழர்) – 52,439 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.

News June 4, 2024

4.8 லட்சம் வாக்குகள் பெற்ற சிவ்ராஜ் சிங் சவுகான்

image

ம.பி முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், விதிஷா தொகுதியில் 4,88,548 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி, இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட பிரதாப்பானு ஷர்மாவை விட 3,67,157 அதிகம் பெற்றுள்ள அவர், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

News June 4, 2024

கேரளாவில் பாஜகவின் முதல் எம்.பி. நடிகர் சுரேஷ் கோபி

image

கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து களம் கண்ட சிபிஐ வேட்பாளர் சுனில் குமாரை 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இதன் மூலம் அங்கு பாஜகவின் முதல் எம்.பி. என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2014 மக்களவைத் தேர்தலில் 11.1% வாக்குகள் பெற்ற பாஜக, 2019 தேர்தலில் 28.2% வாக்குகள் பெற்று கேரளாவில் பலத்தை அதிகரித்து வருகிறது.

News June 4, 2024

அதீத நம்பிக்கையால் பாஜக கணிப்பு பொய்த்ததா?

image

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என பாஜக தலைவர்கள் பெரும் நம்பிக்கையுடன் கூறி வந்தனர். இதை எதிர்க்கட்சியினர் திட்டவட்டமாக மறுத்தனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி தற்போதைய நிலவரப்படி, 292 தொகுதிகளிலேயே முன்னிலை வகிக்கிறது. இதன் அடிப்படையில் தேர்தல் முடிவை பாஜக தவறாக கணித்ததா, இல்லை அதீத நம்பிக்கையினால் கணிப்பு பொய்த்ததா என மக்கள் வினவுகின்றனர்.

News June 4, 2024

நாகையில் வெற்றியை நோக்கி CPI

image

நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் 1,43,911 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

சுர்ஜித் சங்கர் (அதிமுக) – 83,024 வாக்குகள்
கார்த்திகா (நாதக) – 42,162 வாக்குகள்
ரமேஷ் (பாஜக) – 28,808 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

News June 4, 2024

கடப்பா தொகுதியில் YS ஷர்மிளா பின்னடைவு

image

ஆந்திராவின் கடப்பா மக்களவைத் தொகுதியில் காங்., வேட்பாளர் YS ஷர்மிளா, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி YSR கட்சியின் அவினாஷ் ரெட்டி முன்னிலையில் உள்ள நிலையில், தெலுங்கு தேசம் வேட்பாளர் சுப்புராம ரெட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். ஷர்மிளா மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சொந்த அண்ணனான ஜெகனுக்கு எதிராக, காங்கிரசில் இணைந்து அவர் அரசியலில் களமாடி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!