India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகித விவரம் வெளியாகியுள்ளது. திமுக 25.28%, அதிமுக 20.67%, காங்., 10.89%, பாஜக 10.89%, சிபிஎம் 3.56%, தேமுதிக 3.26%, சிபிஐ(எம்) 2.42% வாக்குகள் பெற்றுள்ளன. நோட்டா 1.07% பெற்றுள்ள நிலையில் மற்றவை – 21.15% வாக்குகள் கிடைத்துள்ளன.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலையில், பிரதமர் மோடி அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் என அவரிடம் சந்திரபாபு உறுதி தெரிவித்ததாக, அக்கட்சியின் செய்திதொடர்பாளர் கிரீஷ்மா தெரிவித்தார். முன்னதாக காங்கிரஸ், சந்திரபாபுவுக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி – சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டணி உ.பி.யில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. விவசாய கடன் தள்ளுபடி, சாதிவாரிக் கணக்கெடுப்பு, அக்னி வீர் திட்டம் ரத்து, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் இந்த இளையோர் கூட்டணிக்கு வாக்கு வங்கியாக மாறியுள்ளது. உ.பி.யில் INDIA கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
ஆந்திராவில் சினிமாத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிய முதல் நபராக என்.டி.ராம ராவ் இருக்கிறார். அவருக்குப் பின் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்டோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும், பெரிதாக ஜொலிக்கவில்லை. தற்போது சட்டசபை தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு 20 இடங்களில் முன்னிலையில் உள்ள பவன் கல்யாணுக்கு எதிர்க் கட்சித் தலைவராகும் வாய்ப்புள்ளது.
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் நீண்ட நேரத்திற்கு பிறகு, 3,947 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அங்கு, காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சற்றுநேரம் வரை முன்னிலை வகித்து வந்த அவர், பின்னர், பின்னடைவை சந்தித்தார். தொடர்ந்து, பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் அங்கு முன்னிலை வகித்த நிலையில், தற்போது நிலவரம் மாறியுள்ளது.
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, தேர்தல் வெற்றியை பகிர்ந்துகொள்ளும் வகையில் முதல்வர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, திமுக முன்னிலை பெற்றுள்ளதை தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
காலை முதல் முன்னிலை வகித்துவந்த அதிமுக வேட்பாளர் தமிழ்மணி (நாமக்கல்) தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கிறார். மேலும் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் பின் தங்கியிருக்கிறார். இதனால், அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 1 தொகுதியில் (தருமபுரி) முன்னிலை வகிக்கிறது.
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணிக்கு வருமாறு சந்திரபாபுவுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் இருவரும் தான் இந்தியாவின் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரு மணி நிலவரப்படி 40 தொகுதிகளில் 28இல் அதிமுகவும், 10 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் 2ஆவது இடத்தை பிடித்துள்ளன. அதிமுக கூட்டணி 9, பாஜக கூட்டணி 25, நாம் தமிழர் கட்சி 6 தொகுதிகளில் 3ஆவது இடத்தையும், அதிமுக கூட்டணி 2, நாதக 34, பாஜக 4 தொகுதிகளில் 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இதன் மூலம் பாஜக தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரம் தேர்தலில் அனுதாப அலையாக மாறும் என ஆம் ஆத்மி எதிர்பார்த்தது. ஆனால், தற்போதைய தேர்தல் கள நிலவரம் அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியிருக்கிறது. தலைநகரை தாமரை தன்வசப்படுத்தக்கூடும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.