News April 29, 2025

நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

image

டெல்லியில் PM மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, கடந்த 23-ம் தேதி நடந்த இக்கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றம், எல்லை மூடல், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 5 நாள்களாக எல்லையில் பரபரப்பு நிலவும் நிலையில், நாளை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

News April 29, 2025

அண்ணாமலைக்கு ‘நோ’ எம்.பி. பதவி.. காரணம் இதுதான்!

image

TN பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு அதிகாரமிக்க பொறுப்பு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். <<16247938>>ஆந்திராவில் <<>>இருந்து ராஜ்ய சபா எம்.பி. ஆக்கப்பட்டு பின்னர் மத்திய அமைச்சரவையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அதற்கு காரணம் அண்ணாமலை தானாம். அவர் TN அரசியலில் தீவிரம் காட்ட விருப்பம் தெரிவித்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News April 29, 2025

சூர்யவன்ஷியின் ரோல்மாடல்: சச்சினா? காம்ப்ளியா?

image

14 வயதில் ஐபிஎல்-ல் சதமடித்தன் மூலம் ஒரே நாளில் உச்சத்துக்கு சென்றுவிட்டார் சூர்யவன்ஷி. ஹர்ஷா போக்ளே தொடங்கி உள்ளூர் ரசிகர்கள் வரை புகழ்ந்து வருகின்றனர். அதே நேரம், சிறுவயதில் கிடைக்கும் வெளிச்சத்தில், சூர்யவன்ஷி கவனம் இழந்துவிடக் கூடாது என்கின்றனர். சச்சின்-வினோத் காம்ப்ளி உதாரணத்தை சுட்டிக்காட்டி, சூர்யவன்ஷி சச்சின் வழியில் செல்ல வேண்டும்; காம்ப்ளி வழியில் அல்ல என்கின்றனர்.

News April 29, 2025

பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி!

image

மதுரை K.K.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி ஆருத்ரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 30 நிமிடங்கள் தண்ணீர் தொட்டியில் தத்தளித்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ICU-வில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளி இயங்கியது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

News April 29, 2025

கூட்டணி கணக்கு.. அமித்ஷா – நயினார் சந்திப்பின் பின்னணி!

image

டெல்லி சென்றுள்ள TN பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், தேர்தலை திறம்பட எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், TN-ல் பாஜகவை வளர்ப்பது தொடர்பாக நயினாருக்கு பல்வேறு ஆலோசனைகளை அமித்ஷா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

News April 29, 2025

கோலியின் மூளையில் என்ன இருக்கு தெரியுமா?

image

எத்தனையோ பேர் இருக்க கோலி மட்டும் எப்படி ரன் மிஷின் ஆனார்? கோலி மட்டுமல்ல, எல்லா ஜீனியஸ்களின் மூளை செயல்படும் விதத்திலும் ஒரு பேட்டர்ன் உண்டாம். அதை System 1, System 2 என உளவியலாளர்கள் பிரிக்கிறார்கள். சாதாரண யோசனைகளுக்கு System 1, மூளையைக் கசக்குகிற திட்டங்களுக்கு System 2. இந்த System 2-வை பயிற்சியின் மூலம் நம் System 1 ஆகவே மாற்றி சாதிக்கலாமாம். இப்போ தெரிகிறதா கோலி ஏன் கிங்குன்னு..

News April 29, 2025

இலவச பட்டா விதிகளில் திருத்தம்!

image

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் விதிகளில் அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்குவதற்கான ஆண்டு வருமான வரம்பு ₹3 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 சென்ட் நிலம் வழங்கப்படும். இதில் 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் இல்லை. மீதமுள்ள 1 சென்ட் நிலத்திற்கு அதன் மதிப்பில் 25% தொகையைச் செலுத்த வேண்டும்.

News April 29, 2025

மூடப்பட்ட ரிசார்ட்டுகள்.. சரிவை சந்திக்கும் காஷ்மீர் சுற்றுலா…

image

தாக்குதலை தொடந்து ஜம்மு-காஷ்மீரில் ரிசார்ட்டுகள், முக்கிய சுற்றுலாத் <<16251353>>தலங்கள் <<>>மூடப்பட்டதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். கோடை விடுமுறையையொட்டி காஷ்மீர் செல்லத் தயாராகிய பலர் ரிசார்ட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் சுற்றுலாவை நம்பி இருக்கும் காஷ்மீர் மக்களுக்கு எமனாக அமைந்தது தீவிரவாத தாக்குதல். இதில் இருந்து மீண்டு வருவது எளிதான காரியம் அல்ல.

News April 29, 2025

மீண்டும் PM பதவியை நோக்கி நகரும் மார்க் கார்னி

image

343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் அதை நோக்கி PM மார்க் கார்னியின் லிபரல் கட்சி(167) நெருங்கியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 147 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போதைக்கு மீண்டும் கார்னி பிரதமராகும் சூழல் பிரகாசமாக உள்ளது.

News April 29, 2025

செப்.6-ம் தேதி காவலர் நாள்: CM ஸ்டாலின்

image

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு அந்த நாளில் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காட்சி நடத்தப்படும் என தெரிவித்த ஸ்டாலின், குற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.

error: Content is protected !!