India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டார் அண்ணாமலை. பாஜகவை வளர்க்கும் நோக்கில் நடைபயணம் மேற்கொண்ட போதிலும், அதனை வாக்குகளாக அவரால் அறுவடை செய்ய இயலவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெல்ல முடியாத நிலை உள்ளது. திமுக மீதான அவரது விமர்சனங்களும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது.
ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம், பவன் கல்யாண் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், 25 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், பாஜக 3, பவன் கல்யாண் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. மீண்டும் ஆட்சியமைக்க பாஜகவுக்கு தெலுங்கு தேசத்தின் ஆதரவு கட்டாயம் தேவை. இல்லையெனில் நெருக்கடி ஏற்படும். இதனால் மீண்டும் கிங் மேக்கராக சந்திரபாபு நாயுடு உருவெடுத்துள்ளார்.
நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ், அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா ஆகியோர் தோல்வியை தழுவினார்.
கரூர், குமரி, கிருஷ்ணகிரி, கோவை, சிதம்பரம். மத்திய சென்னை, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, தஞ்சை, விருதுநகர், நெல்லை, திருப்பூர், தி.மலை, நாமக்கல், புதுச்சேரி, பொள்ளாச்சி, மதுரை, திருவள்ளூர், நாகை ஆகிய தொகுதிகளில் பாஜகவும், நாதகவும் நேருக்கு நேரு போட்டியிட்டன. இதில் பாஜக 11.61%, நாதக 4.24% வாக்குகளும் பெற்றுள்ளன. இதன் மூலம் வாக்கு வங்கியில் நாதகவை பாஜக பின்னுக்கு தள்ளியுள்ளது.
தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு அதிகமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற ப.சிதம்பரத்தின் சாதனையை டி.ஆர்.பாலு சமன் செய்ய உள்ளார். டி.ஆர் பாலு இதுவரை 6 முறை மக்களவை எம்.பியாக இருந்துள்ள நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 7ஆவது முறையாக வெற்றியை எதிர்நோக்கியுள்ளார். முன்னதாக, பா.சிதம்பரம் சிவகங்கை தொகுதியிலிருந்து 1984, 1989, 1991, 1996, 1998, 2004, 2009இல் மக்களவைக்கு எம்.பியாக தேர்வானார்.
மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் 4,85,079 வாக்குகளைப் பெற்ற மஹுவா மொய்த்ரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 4,44,395 வாக்குகள் எடுத்த அமித்ஷாவின் தீவிர விசுவாசியான அம்ரிதா ராயை 40,684 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வீழ்த்தியுள்ளார். பர்தமான்-துர்காபூர் தொகுதியில் போட்டியிட்ட கீர்த்தி ஆசாத் 1,23,621 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் திலிப் கோஷை வீழ்த்தி, வெற்றி வாகை சூட்டியுள்ளார்.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிமுகம் காட்டியுள்ள தெலுங்கு தேசம் கட்சி, பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 82 இடங்களில் வெற்றிபெற்றுள்ள TDP, 55 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 17 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில், 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 6 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதுடன், 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா ஆகியோர் தோல்வியை தழுவினர்.
தமிழகத்தில் மாலை 7 மணி வரை காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, குமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம், தேனி, நெல்லை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
குஜராத் காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2ஆவது முறையாக வெற்றி பெற்றார். தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த அவர், காங்கிரஸ் வேட்பாளர் சோனல் படேலை விட 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார். காங்கிரஸ் அவருக்கு நிகரான பலமான வேட்பாளரை அங்கு களமிறக்க தவறியதன் காரணமாக,அமித் ஷாவின் வெற்றி தேர்தலுக்கு முன்பே எளிதானதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.