India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வி
▶இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது
▶ஒடிஷா சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் ரகுபர்தாஸ் அறிவிப்பு
▶28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் மீண்டும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
▶பாஜகவால் I.N.D.I.A கூட்டணியை உடைக்க முடியாது: மம்தா பானர்ஜி
▶கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 2ஆவது இடத்தையும், பாமக வேட்பாளர் கே.பாலு 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் அஃப்சியா நஸ்ரின் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் 136 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்கிறது. ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஜூன் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளார். பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துள்ளது. ஆளும் கட்சியான YSR காங்., வெறும் 10 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 2ஆவது இடத்தையும், அதிமுக வேட்பாளர் பசுபதி 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி 2ஆவது இடத்தையும், பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் சுரேஷ்குமார் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
* மேஷம் – சோர்வு ஏற்படும் , * ரிஷபம் – பகை உண்டாகும், *மிதுனம் – நன்மை தேடி வரும், *கடகம் – பெருமை தேடி வரும், * சிம்மம் – நட்பு வட்டம் உருவாகும், *கன்னி – பணம் வரவு இருக்கும், *துலாம் – புகழ் வெளிச்சம் கிடைக்கும், *விருச்சிகம் – தெளிவாக இருங்கள், *தனுசு – எதிர்பார்த்த உதவி கிடைக்கும், *மகரம் – முயற்சி செய்யுங்கள், *கும்பம் – பதவி உயர்வு கிடைக்கும், *மீனம் – வெற்றி உண்டாகும்.
ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தரணி வேந்தன், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 2ஆவது இடத்தையும், பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் பாக்கியலட்சுமி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வம், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 2ஆவது இடத்தையும், பாமக வேட்பாளர் ஜோதி 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ்குமார் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290+ தொகுதிகளில் வெற்றி வாகை சூட உள்ள நிலையில், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது பேசிய ஜெ.பி. நட்டா, நாட்டில் முதல் முறையாக ஒரு கூட்டணி 3ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளதாகவும், தங்களது வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். அத்துடன், கேரளாவில் கணக்கை தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
400 தொகுதிகளில் தனித்து வெல்வோம் என்ற நம்பிக்கையில் இருந்த பாஜகவுக்கு மக்கள் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது வெற்றியா? தோல்வியா? என்பது தெரியாத அளவில் அது உள்ளது. 2014, 2019 தேர்தல்களில் அக்கட்சி பெற்ற வெற்றியுடன் ஒப்பிடுகையில், இம்முடிவு ஒரு வகையான தோல்வியாகும். 230+ தொகுதிகளை கைப்பற்றும் INDIA கூட்டணி ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.