News June 5, 2024

பாஜகவின் சர்வாதிகாரத்தை வீழ்த்திய சாமானியர்கள்

image

▶பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவை, காங்., வேட்பாளர் ஷ்ரேயஸ் எம்.படேல் வீழ்த்தினார். ▶பல அராஜகங்களுக்கு மத்தியில், குஜராத்தில் ஒற்றை குரலாக பாஜகவை வென்றார் காங்கிரஸின் ஜெனிபென் நாகாஜி தாகூர். ▶பாஜகவினரால் சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், காஷ்மீரில் அப்துல் ரஷீத் ஷேக் வெற்றி பெற்றார். ▶விவசாயிகள் மீது வண்டியை ஏற்றிக் கொன்ற பாஜக வேட்பாளரை, உ.பி., லகிம்பூர் தொகுதி மக்கள் தோற்கடித்தனர்.

News June 5, 2024

விவேகானந்தர் பொன்மொழிகள்

image

✍உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப்பெரிய பாவம். ✍நீ பட்ட துன்பத்தை விட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. ✍உன் மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. ✍பொய் வாழ விடாது, உண்மை சாக விடாது. ✍உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. ✍அன்புடன் பழகுபவர்களே உலகத்திற்குத் தேவை. ✍பொறாமை அடிமைகளின் குணம்.

News June 5, 2024

10+1 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ்

image

மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9, பாண்டிச்சேரியில் 1 என 10 தொகுதிகளையும் வெற்றி பெற்றுள்ளது. திருவள்ளுர்- சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி- கோபிநாத், கடலூர்- எம்.கே.விஷ்ணு பிரசாத், மயிலாடுதுறை- சுதா, கரூர்- ஜோதிமணி, சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், விருதுநகர்- மாணிக்கம் தாக்கூர், நெல்லை- ராபர்ட் புரூஸ், குமரி- விஜய் வசந்த், புதுச்சேரி- வைத்திலிங்கம்.

News June 5, 2024

எல்லா போர்களும் வெற்றிகளுக்கு அல்ல

image

விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார், வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். மாணிக்கம் தாகூர்- 3,82,876, விஜய பிரபாகர்- 3,78,243, ராதிகா- 1,64,149 வாக்குகள் பெற்றனர். இதுகுறித்து தனது X பக்கத்தில், எல்லா போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல என்றும், அவற்றில் சில போர்களில் யாரோ ஒருவர் போரிட்டார்கள் என்று சொல்வதற்காகவே போரிடப்படுகின்றன என்றும் பதிவிட்டுள்ளார்.

News June 5, 2024

பாஜக – காங்கிரஸ் தேர்தல் ஒப்பீடு

image

பாஜக, காங்கிரஸ் கைப்பற்றிய தொகுதிகள் ஒப்பீடு:
▶1984- பாஜக – 2, காங்., – 404 ▶1989- பாஜக – 85, காங்., – 197 ▶1991- பாஜக – 120, காங்., – 244 ▶1996- பாஜக – 161, காங்., – 140 ▶1998- பாஜக – 182, காங்., – 141 ▶1999- பாஜக – 189, காங்., – 114 ▶2004- பாஜக – 145, காங்., – 138 ▶2009- பாஜக – 206, காங்., – 116 ▶2014- பாஜக – 282, காங்., – 44 ▶2019- பாஜக – 303, காங்., – 52 ▶2024- பாஜக – 240, காங்., – 99

News June 5, 2024

ஜூன் 5: வரலாற்றில் இன்று

image

1915 – டென்மார்க்கில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1942 – பல்கேரியா, ஹங்கேரி, உருமேனியா நாடுகள் மீது அமெரிக்கா போரை அறிவித்தது.
1945 – ஜெர்மனி, கூட்டுப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
1956 – இலங்கையில் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1969 – அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது.

News June 5, 2024

குறைந்த வாக்கு வித்தியாசம் பெற்ற டாப் 10 வேட்பாளர்கள்

image

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல்:
▶மாணிக்கம் தாக்கூர் (காங்கிரஸ்) – 4,633 ▶செல்வகணபதி (திமுக) – 70,357 ▶ரவிக்குமார் (விசிக) – 70,703 ▶மணி (திமுக) – 21,300 ▶மலையரசன் (திமுக) – 53,784 ▶மாதேஸ்வரன் (திமுக) – 29112 ▶திருமாவளவன் (விசிக) – 1,03,554 ▶கணபதி ராஜ்குமார் (திமுக) – 1,18,068 ▶சுப்புராயன் (கம்யூனிஸ்ட்) – 1,25,928 ▶ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்) – 1,65,620

News June 5, 2024

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்

image

மக்களவைத் தேர்தலில், திமுக வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் தான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட அவர், 3,82,876 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை விட 4,633 வாக்குகள் அதிகம் பெற்று மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், 1,63,834 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளார்.

News June 5, 2024

அதிக வாக்கு வித்தியாசம் பெற்ற டாப் 10 வேட்பாளர்கள்

image

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல்:
▶சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) – 5,72,155 ▶டி.ஆர்.பாலு (திமுக) – 4,87,029 ▶சச்சிதானந்தம் (கம்யூனிஸ்ட்) – 4,43,821 ▶கனிமொழி (திமுக) – 3,92,738 ▶அருண் நேரு (திமுக) – 3,89,107 ▶கலாநிதி வீராசாமி (திமுக) – 3,39,222 ▶முரசொலி (திமுக) – 3,19,583 ▶துரை வைகோ (மதிமுக) – 3,13,094 ▶ஜெகதரட்சகன் (திமுக) – 3,06,559 ▶சுதா (காங்கிரஸ்) – 2,71,183

News June 5, 2024

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் வெற்றி

image

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அண்ணாதுரை, 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 2ஆவது இடத்தையும், பாஜக சார்பில் போட்டியிட்ட அஸ்வத்தாமன் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் ரமேஷ் பாபு 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

error: Content is protected !!