News June 5, 2024

7 கட்டங்களில் பாஜக, காங்கிரஸ் பெற்ற வெற்றிகள்

image

7 கட்டத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனைத் தொகுதிகளில் வென்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
* 1ஆவது கட்டம்: பாஜக 30, காங். 27
* 2ஆவது கட்டம்: பாஜக 46, காங். 17
* 3ஆவது கட்டம்: பாஜக 57, காங். 15
* 4ஆவது கட்டம்: பாஜக 39, காங்.14
* 5ஆவது கட்டம்: பாஜக 19, காங். 5
* 6ஆவது கட்டம்: பாஜக 31, காங்.6
* 7ஆவது கட்டம்: பாஜக 17, காங். 9.

News June 5, 2024

பங்குச்சந்தைகள் மீண்டும் உயர்கின்றன

image

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 450 புள்ளிகள் உயர்ந்து 22,337 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது முடிவுகள் நிச்சயமற்று இருந்ததால் நேற்று பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. அதனைத் தொடர்ந்து, இன்று பாஜக ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுவதால் பங்குச்சந்தை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது.

News June 5, 2024

பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: சந்திரபாபு நாயுடு

image

டெல்லியில் நடைபெறும் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். பாஜக, ஜன சேனா, தெ.தே.க ஆகியவை இணைந்து பணியாற்றியதால் தான் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், என்.டி.ஏ கூட்டணியில் தான் தெலுங்கு தேசம் கட்சி நீடிக்கிறது எனக் கூறி கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News June 5, 2024

நிதிஷ்குமார் என்ன செய்யவிருக்கிறார்?

image

தேர்தலில் 240 இடங்களை வென்ற பாஜகவுக்கு NDA கூட்டணி கட்சிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. NDA அரசு மீண்டும் அமைய முக்கிய காரணமாக இருக்கப் போவதாக அவதானிக்கப்படும் சந்திரபாபுவுக்கு வாழ்த்து சொன்ன மோடி, மற்றொரு முக்கிய கூட்டாளியான நிதிஷ்குமாருக்கு மட்டும் இதுவரை வாழ்த்துக் கூறவில்லை. அதேபோல, நிதிஷும் மோடிக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதனால், நிதிஷ் என்ன செய்யவிருக்கிறார் என கேள்வி எழுந்துள்ளது.

News June 5, 2024

ஜூன் 10இல் வெளியாகும் ‘கல்கி 2898 கி.பி’ ட்ரெய்லர்!

image

பிரபாஸ் – கமல்ஹாசன் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கிய ‘கல்கி 2898 கி.பி’ படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான சிறப்பு போஸ்டர் ஒன்றை வைஜெயந்தி பிலிம்ஸ் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே வெளியான டீசர் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கும் நிலையில், இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

News June 5, 2024

11 மணி, 3 மணி, 5 மணி

image

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், பாஜக, INDIA கூட்டணியின் கூட்டங்கள் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நிலையில், பிற்பகல் 3 மணிக்கு கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்துகிறார். அதேபோல், மாலை 5 மணிக்கு INDIA கூட்டணித் தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

News June 5, 2024

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதியில் 13 செ.மீ. மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் சிருகமணி, திருப்பத்தூர் மாவட்டம் நாற்றாம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் பரூர், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவானது. சென்னை அருகேயுள்ள செங்குன்றம், பொன்னேரி பகுதிகளில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

News June 5, 2024

சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக வேண்டும்

image

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் வலியுறுத்தியிருக்கிறார். பாஜக கூட்டணிக்கு தெலுங்கு தேசம் ஆதரவளித்தால், துணைப் பிரதமர் பதவியை கேட்டுப் பெற்று தென்னிந்தியாவின் உரிமைகளை நாயுடு பாதுகாத்திட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். செவி சாய்ப்பாரா சந்திரபாபு நாயுடு?\

News June 5, 2024

அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த நாம் தமிழர்

image

தேர்தலில் ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் 6இல் 1 பங்கு வாக்கு பெறவில்லையெனில், வேட்பாளர் டெபாசிட் செய்த வைப்புத் தொகையை இழக்க நேரிடும். இதுபோல தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது. பாஜக 7, அதிமுக 6, பாமக 5, தேமுதிக 2, தமாக 2 தொகுதிகளில் 6இல் 1 பங்கு வாக்குகளை கூட பெறாமல் டெபாசிட் தொகையை இழந்துள்ளன.

News June 5, 2024

பிளேயிங் லெவனை கணித்த தினேஷ் கார்த்திக்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடப் போகும் 11 பேர் கொண்ட இந்திய அணி பற்றிய கணிப்பை முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ளார். DK தேர்வு செய்த அணி:- ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.

error: Content is protected !!