News June 5, 2024

உபி.யில் INDIA கூட்டணி சாதித்தது எப்படி?

image

பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் உ.பி.,யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் INDIA கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியது. இங்கு பிரசாரத்தில், தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை முன்னிறுத்தி அகிலேஷ் மற்றும் ராகுல் பேசியிருந்தனர். மேலும், INDIA கூட்டணி வெற்றி பெற்றால் ராணுவத்தில் அக்னி வீரர் முறை ரத்து செய்யப்படும் என ராகுல் பேசியதும் வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

News June 5, 2024

பாஜக ஆட்சியமைக்கக் கூடாது

image

மெஜாரிட்டி இல்லாத பாஜக, மத்தியில் ஆட்சியமைக்கக் கூடாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். 1989, 1998 ஆகிய ஆண்டுகளில் கூட்டணி ஆட்சியால் பாஜகவுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை சுட்டிக் காட்டியிருக்கும் அவர், மாறாக INDIA கூட்டணியை ஆட்சியில் அமரவிட்டு வலுவான எதிர்க்கட்சியாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

News June 5, 2024

குஜராத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி

image

குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 25இல் பாஜக வென்றது. காங்கிரஸ் 1 தொகுதியில் வென்றுள்ளது. பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜெனிபன் நாகாஜி தாகுர் 30,406 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். குஜராத்தில் 2009 தேர்தலில் 11 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், 2014, 2019 தேர்தல்களில் ஒன்றில் கூட வெல்லவில்லை. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காங்கிரஸ் வென்றுள்ளது.

News June 5, 2024

பாஜகவின் சறுக்கலுக்கு 5 முக்கிய காரணங்கள்

image

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்ததற்கு 5 காரணங்கள் கூறப்படுகிறது. மெகா பேரணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டியது, உள்ளூர் அமைப்புகளைச் சந்திக்க மறுத்தது, மக்களின் அன்றாட பிரச்னைகளை பேச மறுத்தது, தோல்வியில் முடிந்த ராமர் கோவில் பிரசாரம், அக்னிபாத் திட்டம் ஆகியவை பாஜகவின் சறுக்கலுக்கு காரணமாக அமைந்துள்ளதாக க்க்

News June 5, 2024

பிரைவசிக்கு மதிப்பு கொடுத்து அமைதியாக இருங்கள்

image

பிரேம்ஜி திருமண விவகாரத்தில் தங்கள் பிரைவசிக்கு மதிப்பு கொடுத்து அமைதியாக இருங்கள் என இயக்குநர் வெங்கட் பிரபு கேட்டுக்கொண்டுள்ளார். பிரேம்ஜி திருமணத்தை எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளதால் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. யூகத்தின் அடிப்படையில் மணமகள் குறித்த தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், விரைவில் GOAT அப்டேட் வரும் என்றும் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார்.

News June 5, 2024

ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார்?

image

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மிகுந்த நம்பிக்கையுடன் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அங்கு தோல்வியை சந்தித்துள்ளார். இதையடுத்து அவர் என்ன அரசியல் நகர்வை மேற்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவை மீண்டும் உரிமை கோரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவாரா? பாஜகவில் சேருவாரா? இல்லை அரசியல் வேண்டாமென ஒதுங்குவாரா? என அரசியல் ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.

News June 5, 2024

ஆட்சியமைக்க உரிமை கோரி பாஜக மனு

image

மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று பாஜக மேலிடம் மனு அளிக்கவுள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால், ஆட்சியை அமைக்க NDA & INDIA கூட்டணிகள் அரசியல் கட்சிகளிடம் பாஜக ஆதரவு கேட்டுவருகிறது. இந்தப் பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியின் இல்லத்தில் கூடிய பாஜகவின் அரசியல் உயர்மட்ட குழு, இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News June 5, 2024

பாஜகவுக்கு கண்டிஷன் போடும் நாயுடு, நிதிஷ்

image

தனிப்பெரும்பான்மை இல்லாததால், பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், இரு தலைவர்களும் பாஜகவிற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்டநாள் கோரிக்கையான ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து, மக்களவை சபாநாயகர் பதவி மற்றும் முக்கிய அமைச்சரவை இலாகாக்களை இரு தலைவர்களும் கேட்பதாக கூறப்படுகிறது.

News June 5, 2024

பாமக தயவால் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்ததா?

image

பாமகவுக்கு வாக்கு வங்கி இருக்கும் இடங்களில்தான் பாஜகவின் வாக்குகள் அதிகரித்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 11.2% ஆக உயர்ந்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மின்னணு வாக்கு இயந்திரத்தை வைத்து பாஜக விளையாடியுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.

News June 5, 2024

3 முன்னாள் முதல்வர்கள் வெற்றி

image

கர்நாடகாவின் 3 முன்னாள் முதல்வர்களும் வெற்றி பெற்றுள்ளனர். மஜத முன்னாள் முதல்வர் குமாரசாமி, மண்டியா தொகுதியில் 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல் பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹாவேரி தொகுதியில் 43,513 வாக்குகள் வித்தியாசத்திலும், மற்றொரு பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பெலகாவி தொகுதியில் 56,433 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.

error: Content is protected !!