India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் அரைமணி நேரமாக இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, கிண்டி, வடபழனி, நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், போரூர், ஐயப்பன்தாங்கல், வளசரவாக்கம், திருவேற்காடு, காட்டுப்பாக்கம், பூந்தமல்லி, மாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மும்பை வடமேற்கு தொகுதியில் 48 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா கட்சியை ( ஏக்நாத் ஷிண்டே பிரிவு) சேர்ந்த ரவீந்திர தத்தாரம் வெற்றி பெற்று ஆச்சரியம் அளித்துள்ளார். அதே போல, கேரளாவில் காங்கிரஸை சேர்ந்த ஆடூர் பிரகாஷ் என்பவர் 684 வாக்குகள் வித்தியாசத்தில், சிபிஎம் வேட்பாளரை வென்றுள்ளார். உ.பியில் சலீம்பூர் தொகுதியில், சமாஜ்வாதி வேட்பாளர் 3,573 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார்.
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளரும், முன்னாள் மேயருமான கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியடைந்தார். இதேபோல் தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. தேர்தலில் வென்று அண்ணாமலை மத்திய அமைச்சராகலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தத் தோல்வி அவரது கட்சிப் பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக பரவலாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் முன்னோட்டமாக கருத முடியாது என அரசியல் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் பகுத்தறிந்து வாக்களிக்கும் திறன் கொண்டவர்கள் என்றும், தற்போதைய வெற்றி பிரதமர் தேர்வுக்கான முடிவு எனவும் கூறுகின்றனர். அதே நேரம், 2026 சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவு 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் மதிப்பீடாக இருக்கும் என கருதுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து 4.23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால், மாநில கட்சி அந்தஸ்தை மீண்டும் இழந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதில் மாநில கட்சி அந்தஸ்தை ஏன் நீக்கக் கூடாது எனக் கேட்டிருப்பதாகவும் தெரிகிறது.
உ.பி தோல்விக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தேவேந்திர ஃபட்னாவிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். உ.பி மாநில பாஜக மேலிட பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அம்மாநிலத்தில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 80 தொகுதிகளை உடைய அம்மாநிலத்தில், 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 62 இடங்களில் பாஜக வென்றது.
நாட்டை வழி நடத்தும் பணியை INDIA கூட்டணி மேற்கொள்ளும் என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். சர்வாதிகார ஒற்றையாட்சிக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை, தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும், மதவாத சக்திகளை ராமர் கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்தி காட்டியிருக்கிறார்கள் எனவும் பாஜகவை விமர்சித்த ஸ்டாலின், சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. மைனாரிட்டி அரசு என்பது தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை என்பதால், கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டிய சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்சியை பலமாக தக்கவைக்க INDIA கூட்டணியில் இருக்கும் கட்சிகளை NDA கூட்டணியில் இணைக்க பாஜக முயலும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, தி.மலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கனமழையின்போது மணிக்கு 30 – 40 கி.மீ. வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’, ஜூன் 14ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் பெற்ற நித்திலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்கி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் முன்னணி பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார்.
Sorry, no posts matched your criteria.