India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உ.பி மாநிலம் கௌஷாம்பி தொகுதியில் 25 வயதே ஆன இளம் சமாஜ்வாதி வேட்பாளர் புஷ்பேந்திர சரோஜ், பாஜக வேட்பாளர் வினோத் குமார் சோங்கரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால், புஷ்பேந்திர சரோஜின் தந்தையான முன்னாள் அமைச்சர் இந்தர்ஜித் சரோஜ், 2019 மக்களவைத் தேர்தலில், பாஜகவின் வினோத் குமார் சோங்கரிடம் தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த அண்ணாமலையை திமுகவின் கனிமொழி விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “என் தந்தை முதலமைச்சரோ, எம்எல்ஏவோ கிடையாது. குப்புசாமி!, ஆடு மாடு மேய்த்தார். என்னிடம் பொறுமையாக செல் என அறிவுரை கூறியுள்ளார். ஒருவேளை கனிமொழி பாஜகவில் இணைந்தால் “நான் பதவி விலகுவது” குறித்து பரிசீலனை செய்கிறேன் என அண்ணாமலை பதிலளித்தார்.
மோடி தலைமையிலான பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக INDIA கூட்டணி தொடர்ந்து போராடும் என காங்., கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். INDIA கூட்டணி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அவர், பாஜக ஆட்சி செய்யக்கூடாது என விரும்பிய மக்களின் விருப்பத்தை உணர்ந்து, உரிய நேரத்தில் தகுந்த முடிவெடுப்போம் என்றார். மேலும், இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து 96 ரன்னில் சுருண்டது. டாஸ் வென்ற இந்தியா, பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து திணறியது. அந்த அணியின் கரேத் டெலானி மட்டும் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் பாண்டியா 3, சிராஜ் 2, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், இதே கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், எதிர்க்கட்சிகளின் எதிர்கால திட்டம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. அதிமுக, பாஜக இரு அணிகளாக களம் கண்ட எதிர்க்கட்சிகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அமையப்போகும் கூட்டணி குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் 78 பெண்கள், எம்பிக்களாக தேர்வாகினர். 2024 மக்களவைத் தேர்தலில் 75 பெண்கள் எம்பிக்களாக தேர்வாகியுள்ளனர். இது ஒட்டுமொத்த எம்பிக்களின் எண்ணிக்கையில் 13.9% ஆகும். அதில் கட்சி வாரியாக எத்தனை பெண்கள் எம்பிக்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை காணலாம்.
*பாஜக – 32
* காங்கிரஸ் – 13
* திரிணாமுல் காங்கிரஸ் -11
* சமாஜ்வாதி -5
* திமுக -3
* என்சிபி (எஸ்பி)- 1.
9, 10ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திட்டங்களின் அடிப்படையில் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு இருதாள்களாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் தாளில் கணிதம் தொடர்புடைய 60 வினாக்கள், இரண்டாம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்புடைய 60 வினாக்கள் இடம்பெறும். ₹50 கட்டணம் செலுத்தி, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஜூன் 26க்குள் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.
காங்கிரஸ் 8 மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த தேர்தலை விட 2024 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வென்றிருந்தாலும், ஆந்திரா, அருணாச்சல், ஹிமாச்சல், ம.பி, உத்தராகண்ட், திரிபுரா, சிக்கிம், மிசோராம் உள்ளிட்ட மாநிலங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. அதே போல பாஜக 240 இடங்களில் வென்றிருந்தாலும் தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
நடிகை சுனைனா தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதை குறிப்பிடும் வகையில், சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ‘லாக்’ என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ள அவர், வருங்கால கணவர் குறித்தும், திருமணத் தேதி குறித்தும் அந்தப் பதிவில் ஏதும் குறிப்பிடவில்லை. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தரும் பவுலராக பும்ரா இருப்பார் என ஆஸி.,முன்னாள் வீரர் மெக்ராத் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டதை போல, உலகக் கோப்பையில் அசத்துவார் என்ற அவர், பும்ரா சிறப்பாக பந்து வீசினாலும் அவருடன் இணைந்து இந்திய அணியில் யார் பந்து வீசுவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பவுலிங்கில் இந்தியா அசத்தினால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.