News June 6, 2024

டி20 கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் புதிய சாதனை

image

ஓமன் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புதிய சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில், 6 Four, 1 Six என விளாசி 56(51) ரன்கள் குவித்தார். இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (3155 ரன்கள்) குவித்த முதல் ஆஸி., வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதனால், முதலிடத்தில் இருந்த முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்ச், (3120 ரன்கள்) 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

News June 6, 2024

ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த அதிமுக

image

அதிமுகவை முடக்க மற்ற கட்சித் தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்ததாக அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்க ஓபிஎஸுக்கு உரிமையில்லை என தெரிவித்தார். அதிமுகவை முடக்க நீதிமன்றம் சென்றவர்தான் ஓபிஎஸ் எனவும், அதிமுகவுக்கு எதிராக பாஜகவுடன் இணைந்து ராமநாதபுரத்தில் போட்டியிட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

News June 6, 2024

சசிகலா பெயரை உச்சரிக்க மறுத்த கே.பி.முனுசாமி

image

அதிமுகவில் குழப்பத்தை விளைவிக்க சிலர் அறிக்கை விடுவதாக, சசிகலாவை அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி மறைமுகமாக சாடினார். மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். இது குறித்து பேசிய கே.பி.முனுசாமி, ஓபிஎஸ் பெயரை குறிப்பிட்டு நேரடியாக பதிலடி கொடுத்தார். அதே நேரம், சசிகலாவின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக சாடினார்.

News June 6, 2024

‘Miss You’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

image

சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ (Miss You) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘களத்தில் சந்திப்போம்’ பட இயக்குநர் ராஜசேகர் இயக்கும் இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். இந்தப் படம், முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தில் உருவாகவுள்ளது. ‘சித்தா’ பாடத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நீண்ட நாள்களுக்கு பிறகு காதல் கதைக்களத்தில் நடிக்க உள்ளதால், ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.

News June 6, 2024

இபிஎஸ் தலைமைக்கு சிக்கல் (1/3)

image

தமிழகம் & புதுச்சேரியில் 35 தொகுதிகளில் போட்டியிட்ட இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 2017 ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தொடங்கி உள்ளாட்சி, சட்டப்பேரவை, இடைத்தேர்தல் என தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இபிஎஸ் தலைமைக்கு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட்டையும், 9 தொகுதிகளில் 2ஆம் இடத்தையும் இழந்துள்ளது.

News June 6, 2024

இபிஎஸ் தலைமைக்கு சிக்கல் (2/3)

image

அதிமுகவின் கொடி, சின்னம், சொத்துகள் என அனைத்தையும் இபிஎஸ் தன்வசம் வைத்திருக்கிறார். இருப்பினும் அவரால் அக்கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கூட இம்முறை அக்கட்சியால் சோபிக்க முடியவில்லை. உள்கட்சி பூசல், 2ஆம் கட்ட தலைமைகளின் உள்ளடி வேலைகள், கூட்டணி குறைபாடு, நிர்வாக திறனின்மை போன்ற காரணங்களால் இபிஎஸ் தடுமாறி வருகிறார்.

News June 6, 2024

இபிஎஸ் தலைமைக்கு சிக்கல் (3/3)

image

இபிஎஸ் ‘ஒற்றைத் தலைமை’க்கு எதிராக சசிகலா – ஓபிஎஸ் – TTV தினகரன் அடுக்கிய குற்றச்சாட்டுகளை இப்போது அடிமட்ட தொண்டர்களும் முன்வைக்க தொடங்கியுள்ளனர். தொடர் தோல்விகளால் மனந்தளர்ந்துள்ள அதிமுகவின் தொண்டர்களை நோக்கி, சசிகலா காய் நகர்த்தி வருகிறார். அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வெட்டப்படும் பரிதாபகரமான ‘ராஜா’வின் நிலையில், தற்போது இபிஎஸ்-இன் தலைமை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News June 6, 2024

நீட் தேர்வில் இது எப்படி சாத்தியம்?

image

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பல குளறுபடிகள் இருப்பதாக கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். நாடு முழுவதும் 67 பேர் 720/720 பெற்று முதலிடம் பிடித்த நிலையில், அதில் 8 பேர் ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அடுத்தடுத்த வரிசை எண் கொண்ட 6 பேர் முதலிடம் பிடித்திருக்கின்றனர். இவை அனைத்தும் நீட் தேர்வின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

News June 6, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மற்றும் செம்பரம்பாக்கத்தில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8 செமீ மழையும், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், பொன்னேரி, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

News June 6, 2024

சேஸிங்கில் புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா

image

அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில், 4 Four, 3 Six என விளாசிய அவர், 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில், சேஸிங்கில் அரை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். நேற்று ஒரே நாளில் மட்டும் ரோஹித் ஷர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

error: Content is protected !!