India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தலைமை பொறுப்பில் இருந்து அண்ணாமலையை உடனடியாக மாற்ற வாய்ப்பில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் ஆட்சி அமைப்பதில் தலைமைக்கு மிகப்பெரிய சிக்கல் இருப்பதால், அதில்தான் டெல்லி தலைமை முழு கவனம் செலுத்தும் என கூறுகின்றனர். அதன் பிறகு, தமிழகத்தில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அதில் கிடைக்கும் தகவல்களை பொறுத்து, மாற்றம் குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கின்றனர்.
பங்குச்சந்தை முறைகேட்டில் பிரதமர், உள்துறை அமைச்சரோடு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மோடி, அமித் ஷா பேச்சால் பங்குச்சந்தையில் அதிக முதலீடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், கருத்துக்கணிப்புக்கும், வெளிநாட்டு முதலீட்டுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளார். கருத்துக்கணிப்புக்கு பின் பங்குச்சந்தை 3.39% உயர்ந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலியான கருத்துக்கணிப்பு நடத்தியவர்களை விசாரிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ஜூன் 4ஆம் தேதிக்குள் பங்குகளை வாங்கும் படி, மே 13ஆம் தேதியே அமித் ஷா கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார். பங்குச்சந்தை குறித்து மோடி பேசியதையும் குறிப்பிட்ட அவர், கருத்துக்கணிப்புக்கு பின், பங்குச்சந்தை கணிசமாக உயர்ந்தது ஊழல் நடந்துள்ளதை காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படுதோல்வியடைந்தார். இதையடுத்து, திமுகவினர் மட்டன் (ஆடு) பிரியாணி விருந்து கொடுத்தனர். இந்நிலையில், திமுகவினர் ஆட்டை கொடூரமாக வெட்டி, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக விமர்சித்த அண்ணாமலை, திமுகவினருக்கு என் மீது கோபம் இருந்தால் ஆட்டை வெட்ட வேண்டாம், என் மீது கை வைக்கலாம் என சவால் விடுத்துள்ளார்.
கர்நாடக அமைச்சர் ராகவேந்திரா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மகரிஷி வால்மிகி பழங்குடியின வளர்ச்சி வாரியத்தின் ₹88.62 கோடி முறைகேடாக பிற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, அதிகாரி சந்திரசேகரன் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ராகவேந்திராவுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திணிக்கப்பட்ட கருத்துக்கணிப்பு விவரங்கள், பாஜக தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக்கணிப்புகளை வைத்து பங்குச்சந்தையில் ₹38 லட்சம் கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒடிஷாவில் ஆட்சியை இழந்ததை எண்ணி, பி.ஜே.டி., தொண்டர்கள் வெட்கப்பட தேவையில்லை என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். பி.ஜே.டி., எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய அவர், “பிஜேடி கட்சி 24 ஆண்டுகளாக ஒடிஷாவுக்கு சேவை செய்துள்ளது. நாம் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம். 70% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தனர். அதனை 10% ஆகக் குறைத்துள்ளோம்” என்றார்
இந்தி டிவி தொடர்களில் நடிக்கும் புதுமுக நடிகைகளை விலங்குகளைப் போலதான் நடத்துவார்கள் என்று நடிகை உர்ஃபி ஜாவேத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனல் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அவர், பாலிவுட்டில் மட்டுமல்ல இந்தி தொடர்களில் பணிபுரிவது கூட மிகவும் கடினம் என்றும், ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட சம்பளத்தைக் கூட தருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
2024 எம்.பி தேர்தலில் 280 பேர் முதல் முறையாக எம்பிக்களாக தேர்வாகியுள்ளனர். 2019 தேர்தலில் 263 பேர் தேர்வான நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மேலும், ஒருவர் 8ஆவது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்பியாக தேர்வாகி உள்ளார். 9 பேர் பிற கட்சிக்கு மாறிச் சென்று எம்பியாகியுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட 53 அமைச்சர்களில் 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் இன்று இரவோடு விலக்கிக் கொள்ளப்படுகிறது. இதனையடுத்து, கிடப்பிலிருக்கும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலில் மக்கள் அளித்த அமோக வெற்றிக்கு பரிசாக பல புதிய திட்டங்களை அறிவிக்கவும் திமுக அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.