News June 6, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – உறுதியுடன் செயல்படுங்கள் , *ரிஷபம் – அலைச்சல் உண்டாகும், *மிதுனம் – சோர்வு ஏற்படும், *கடகம் – துன்பம் வரும், *சிம்மம் – மகிழ்ச்சியான நாளாக அமையும், *கன்னி – பணம் வரவு, *துலாம் – இரக்கத்துடன் இருங்கள் *விருச்சிகம் – பிறருக்கு உதவுங்கள், *தனுசு – கோபம் கொள்ள வேண்டாம், *மகரம் – பகை உண்டாகும், *கும்பம் – ஆர்வத்துடன் செயல்படுங்கள், *மீனம் – தோல்வி ஏற்படும்.

News June 6, 2024

கேசவ விநாயகத்தை விசாரிக்க உயர் நீதிமன்றம் நிபந்தனை

image

பாஜக மூத்த தலைவர் கேசவ விநாயகத்தை நீதிமன்ற அனுமதியுடன் மட்டுமே விசாரணைக்கு அழைக்க வேண்டும் என சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைத்தனர். இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

News June 6, 2024

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்: துரை வைகோ

image

மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன் என திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார். தனக்கு பெரிய அளவுக்கு பேச தெரியாது என்ற அவர், அனைத்தையும் படிப்படியாக கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அரசியலில் கத்துக்குட்டியாக இருந்தாலும், மூத்தோரின் வழி நடத்துதலின் படி செயல்பட்டு, சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு இருப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார்.

News June 6, 2024

ரஜினியை குடும்பத்துடன் சென்று சந்தித்த சரத்குமார்

image

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுடன் மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணத்திற்கான அழைப்பிதழை சரத்குமார், ராதிகா, வரலட்சுமி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

News June 6, 2024

மக்கள் அளித்த பரிசே தேர்தல் வெற்றி: கனிமொழி

image

திமுக அரசின் திட்டங்களுக்கு மக்கள் அளித்த பரிசே தேர்தல் வெற்றி என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மோடி எத்தனை முறை தமிழகத்துக்கு வந்து ரோடு ஷோ நடத்தினாலும் பாஜக வெற்றி பெறாது என்ற அவர், 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டத்தின் வெளிப்பாடாகவே தேர்தல் முடிவுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். திமுகவின் இந்த மாபெரும் வெற்றி, 3 ஆண்டு ஆட்சிக்கு மக்கள் கொடுத்த சான்றிதழ் என்றார்.

News June 6, 2024

240இல் 116ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட மோடி

image

பாஜக வென்ற 240 தொகுதிகளில், வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தின் அடிப்படையில் மோடி 116ஆவது இடத்தில் உள்ளார். வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, 1.52 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த முறை 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற அவர், இந்த முறை குறைவான வாக்குகளே பெற்றார். ஆனால், காந்தி நகரில் போட்டியிட்ட அமித் ஷா, 7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

News June 6, 2024

மலையேற்றத்தின்போது 9 பேர் பலி

image

உத்தராகண்டில் மலையேற்றத்தின்போது கர்நாடகத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையேற்றம் சென்றுவிட்டு உத்தரகாசிக்கு திரும்பும் வழியில் பலத்த காற்றும், பனிப்பொழிவும் ஏற்பட்டதால் அவர்கள் தடம் மாறினர். இந்த மோசமான வானிலை காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். மேலும், மலைப்பகுதியில் வழி தெரியாமல் பரிதவித்த 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

News June 6, 2024

யோகி ஆதித்யநாத் பதவி பறிப்பு?

image

உத்தர பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து அக்கட்சியின் தலைமை யோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் கோட்டையாக விளங்கிய உத்தர பிரதேசம், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் கடந்த முறை 62 தொகுதிகளில் வென்ற பாஜக, இம்முறை வெறும் 33 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 6, 2024

காங்கிரசில் இணைந்த சுயேச்சை எம்பி

image

காங்கிரசில் 99 எம்பிக்கள் இருக்கும் நிலையில் சுயேச்சை MP ஒருவர் காங்கிரசில் இணைந்ததன் மூலம் மொத்த MP.,க்கள் எண்ணிக்கை 100 ஆனது. மகாராஷ்டிராவில் காங்., கட்சியைச் சேர்ந்த விஷால் பாட்டீல் என்பவருக்கு கட்சியில் சீட் மறுக்கப்பட்டது. இதையடுத்து, சுயேச்சையாக நின்று சிவ சேனா (உத்தவ் அணி) வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த வெற்றியையடுத்து மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார்.

News June 6, 2024

ராகுல் புகாருக்கு பியூஸ் கோயல் கண்டனம்

image

பங்குச்சந்தையில் ஊழல் நடைபெற்றதாக ராகுல் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளருக்கு அச்சத்ததை ஏற்படுத்தும் வகையில் ராகுல் பேசியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, ஜூன் 4இல் பங்கு சந்தையில் ₹38 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறி, விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் வலியுறுத்தியிருந்தார்.

error: Content is protected !!