India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தார். தென் சென்னையில் 3ஆவது முறை போட்டியிட்ட அவர், 1.72 லட்சம் வாக்குகளுடன் 3ஆவது இடம் பிடித்தார். இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஜெயக்குமாரை பொதுவெளியில் பார்க்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அடிக்கடி பேட்டி கொடுக்கும் அவரை கடந்த 3 நாள்களாக காண முடிவதில்லை எனக் கூறி வருகின்றனர்.
1654 – பிரான்ஸ் மன்னராக பதினான்காம் லூயி முடிசூடினார்.
1917 உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000க்கும் அதிகமான ஜெர்மனியப் படையினர் கொல்லப்பட்டனர்.
1974 – இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி பிறந்தநாள்.
2000 – இஸ்ரேல்-லெபனான் இடையே, ஐக்கிய நாடுகள் அவை எல்லைக் கோட்டை வரையறுத்தது. 2007 ஈழப்போர்: கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் சில…
*தபால் நிலைய சேமிப்பு கணக்கு
(குறைந்தபட்சம் ₹500 முதலீடு)
*1, 2, 3, 5 வருட டைம் டெபாசிட் திட்டம் (குறைந்தபட்சம் ₹1000)
*5 வருட ரெக்கரிங் டெபாசிட் திட்டம் (குறைந்தபட்சம் ₹100)
*சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (குறைந்தபட்சம் ₹1000, அதிகபட்சம் ₹30 லட்சம்)
*மாத வருமான கணக்கு (குறைந்தபட்சம் ₹1000) *நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் (குறைந்தபட்சம் ₹1000)
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை, இன்று சர்வ சாதரணமாக USA அணி வீழ்த்தி மரண பயத்தை காட்டியுள்ளது. நடப்பு தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் காலடி எடுத்து வைத்த USA ஆரம்பம் முதலே அமர்க்களப்படுத்தி வருகிறது. இதனிடையே ஜூன் 25ஆம் தேதி இந்தியா-அமெரிக்கா இடையே லீக் போட்டி நடைபெற உள்ளது.
▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: நட்பியல்
▶அதிகாரம்: பெண்வழிச்சேறல்
▶குறள்: மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
▶பொருள்: தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பைக் குறைக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டண உயர்வை மக்கள் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும் என வினவியுள்ளார்.
இன்று (ஜூன் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
T20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 11ஆவது லீக்கில், முதலில் ஆடிய PAK அணி, 159/7 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய USA அணியும் 159/3 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் USA சிறப்பாக செயல்பட்டு PAK அணியை வீழ்த்தியது. இதன்மூலம், குரூப் A பிரிவில் USA அணி முதலிடத்தைப் பிடித்தது. இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை டி20 தொடரின் 11ஆவது லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் – அமெரிக்கா அணிகள் மோதின. டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணிகளும் தலா 159 ரன்கள் எடுத்ததால் டிராவில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீச முடிவு செய்யப்பட்டது. முதலில் களமிறங்கிய USA அணி 6 பந்துகளில் 18 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி துரத்த உள்ளது.
இன்று (ஜூன் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Sorry, no posts matched your criteria.