India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரெபெக்ஸ் ரெஃப்ரிஜரண்ட் நிறுவனம், கேஸ், மின்சார விற்பனை உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குமதிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் 11,000% அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, 1 பங்கின் மதிப்பு ₹1ஆக இருந்த நிலையில் ₹151.8 ஆக உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்நிறுவன பங்கில் ₹1 லட்சம் முதலீடு செய்திருந்தால் , அதன் தற்போதைய மதிப்பு ₹1 கோடியாகும்.
டி20WC தொடரில் உகாண்டா அணியை மே.இ.தீவுகள் அணி 39 ரன்களில் சுருட்டி சாதனைப் படைத்துள்ளது. முதலில் விளையாடிய மே.இ.தீவுகள் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய உகாண்டா அணி, தடதடவென விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 12 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மே.இ.தீவுகள் அணியின் ஹுசைன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல், பெண்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்றாகும். அந்த சீரியல் நேற்றிரவுடன் நிறைவு பெற்றுள்ளது. கடைசி நாளான நேற்றைய எபிசோடு உணர்ச்சிமயமாக இருந்தது. குணசேகரனாக நடித்த வேலராமமூர்த்தி கொலை வழக்கில் கைது, சகோதரர்கள் மீண்டும் இணைந்தது, கொலையானதாக கூறப்பட்ட பாட்டி உயிரோடு வந்து அறிவுரை வழங்கியது என திருப்பங்களுடன் நிறைவு பெற்றது.
சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் நேற்றுடன் முடிந்துள்ளது. அந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் திடீர் மறைவையடுத்து, டிஆர்பி ரேட்டிங் குறைந்ததால் அவசர அவசரமாக சீரியல் முடித்து கொள்ளப்பட்டதாக காரணம் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த சீரியல் ஒளிபரப்பான இரவு 9 மணிக்கு, சிங்கப் பெண்ணே சீரியல் ஒளிபரப்பாகும் என சன் டிவி அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 9 இடங்களிலும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 7 இடங்களிலும் வென்றன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே கட்சி செய்தி தொடர்பாளர் நரேஷ், உத்தவ் ஆதரவு எம்பிக்கள் 2 பேர் தங்களுடன் பேசி வருவதாகவும், அவர்கள் இணைந்த பின், மேலும் 4 பேர் தங்கள் அணியில் இணைய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜீ தமிழின் ஆஸ்தான தொகுப்பாளரான கீர்த்தி சாந்தனு, சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் தலைக்காட்ட உள்ளார். இம்முறை தனது அடுத்த இன்னிங்ஸை அவர் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறார். பாலாவுடன் இணைந்து கீர்த்தி, ‘டிக் டிக் டிக்’ என்ற புதிய ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கவுள்ளார். திரை நட்சத்திரங்களும் பொதுமக்களும் இணைந்து விளையாடும் கேம் ஷோவாக ‘டிக் டிக் டிக்’ இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப் போர் வீரர் ஹாரோல்ட் டெரென்ஸ், தன்னுடைய 100ஆவது வயதில் 96 வயது ஜியான் ஸ்வெலினை திருமணம் செய்து கொண்டார். பிரான்சின் நார்மண்டி நகர கடற்கரையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நாளுக்காக 96 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்ததாக மணப்பெண் ஸ்வெலின் மகிழ்ச்சிப் பொங்கத் தெரிவித்தார்.
உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டியான இந்தியா – பாகிஸ்தான் இன்று நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையைத் தொடர்ந்து, இரு அணிகளும் உலகக் கோப்பை தவிர வேறு எங்கும் நேருக்கு நேர் மோதுவதில்லை. ஆகையால், சுமார் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இரு அணிகளும் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில், யார் வெல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஜார்கண்ட், சத்தீஸ்கர், பிஹார் ஆகிய 3 மாநிலங்களில் பழங்குடிகளால் தெய்வமாக வணங்கப்படும் ‘விடுதலை வீரன்’ தான் பிர்ஸா முண்டா. ஏகாதிபத்தியத்தையும், சாதியத்தையும் எதிர்த்து போராடிய பிர்ஸா, தனது 24 வயதில் வீரமரணம் அடைந்தார். எனினும், பிர்ஸா தொடங்கிய பழங்குடி மக்களின் நிலத்துக்கான போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை. அம்மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
முடிந்தவரை சபாநாயகர் பதவியை கைப்பற்றிவிடுங்கள் என்று ஐக்கிய ஜனதாதளம் மற்றும் தெலுங்குதேசம் கட்சிக்கு ஆதித்ய தாக்கரே அறிவுரை கூறியுள்ளார். சபாநாயகர் பதவி கிடைக்காவிட்டால் பாஜக உங்களது எம்பிக்களை அபகரித்துக் கொள்ளும் என்றும் அதன்பின் கட்சி உங்களது இல்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே, இரு கட்சிகளும் சபாநாயகர் பதவியை கேட்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.