India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையே அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டை வழிநடத்தும். குடியரசுத் தலைவருக்கு முக்கிய முடிவுகள் குறித்து பரிந்துரைகளையும் அளிக்கும். அந்த அமைச்சரவையில் அதிகபட்சம் எத்தனை பேர் இருக்கலாம் என்பது குறித்து மக்களவை விதி 75 (1ஏ) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மக்களவை மொத்த உறுப்பினர்களில் அமைச்சர்கள் எண்ணிக்கை 15% தாண்டக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
இத்தாலியில் வருகிற 14ஆம் தேதி ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இத்தாலி செல்கிறார். அங்கு ஒருநாள் தங்கியிருக்கும் மோடி, ஜி7 மாநாட்டில் பல்வேறு விவகாரம் குறித்து பேசுவதோடு, தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதையடுத்து, அடுத்த நாளே இந்தியா திரும்பவுள்ளார். பின்னர், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மோடி பங்கேற்கவுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கியது. 2.58 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மே 28 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அந்தந்த கல்லூரிகளில் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி, 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பிற்காக தொடர் சிகிச்சையை நடிகை சமந்தா பெற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அண்மையில் அவர் ரெட் லைட் தெரபி எனும் சிகிச்சையை பெற்றுள்ளார். இந்த தெரபி மூலம் சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த தெரபியை தனது வளர்ப்பு பூனையுடன் சேர்ந்து சமந்தா எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் நாலுமுக்கு மற்றும் கோவை மாவட்டம் சோலையார் பகுதிகளில் தலா 11 செ.மீ. மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை & நெல்லை மாவட்டம் ஊத்து பகுதிகளில் தலா 9 செ.மீட்டர் மழையும் Lower அணைக்கட்டு, மணல்மேடு, கக்கச்சி ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
தனக்கு சொந்தமான 100 டன் தங்கத்தை பிரிட்டனில் இருந்து, இந்தியா அண்மையில் திரும்ப பெற்றது. இதற்கான காரணம் குறித்த கேள்விக்கு RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் பதிலளித்துள்ளார். அதில் அவர், பிரிட்டனில் இந்தியா இருப்பு வைத்த தங்கத்தின் அளவு புதிய கொள்முதல் காரணமாக அதிகரித்து விட்டதாகவும், அதனால், 100 டன் தங்கத்தை திருப்பி நாட்டுக்கு எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
193 மருத்துவர்களின் பணி நியமன உத்தரவை ரத்து செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 1021 பேர் தேர்வான நிலையில், அவர்களுக்கு நியமன உத்தரவு அளிக்கப்பட்டது. இதில், 193 பேர் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியில் சேரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களது பணி நியமனத்தை ரத்து செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
திரைப்படங்களை இயக்கும் ஆசை தனக்கு உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார். மகாராஜா டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, படங்களை இயக்கும் ஆசை உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஆசை இருக்கு. ஆனா, அது பெரிய வேலை. இப்போதைக்கு பண்ண முடியாது. பின்னாளில் பண்ணலாம்” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் இணைவதற்கான JEE Advanced நுழைவுத் தேர்வின் முடிவுகள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. டெல்லியைச் சேர்ந்த வேத் லஹோதி 360க்கு 355 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார். மும்பை பகுதியைச் சேர்ந்த த்விஜா தர்மேஷ் பெண்களில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். முடிவுகளை தெரிந்துகொள்ள <
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்றிரவு விளையாடவுள்ள இந்திய அணியை பொருத்தவரை ரோஹித், கோலி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருப்பதும், பும்ரா, அர்ஸ்தீப், சிராஜுடன் சேர்ந்து ஆல்ரவுண்டர் பாண்டியாவும் பந்துவீச ஆரம்பித்திருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சூரியகுமார் யாதவின் சொதப்பலான பேட்டிங், அணியில் குல்தீப் யாதவ் இல்லாதது பலவீனமாக கருதப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.