News June 9, 2024

பாஜகவில் குற்றவாளிகள் இருப்பது உறுதி: ரகுபதி

image

பாஜகவில் குற்றவாளிகள் இருப்பதை தமிழிசை ஒப்புக்கொண்டுள்ளார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 400 இடங்களில் வெல்வோம் என்று கூறியவர்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாஜக கூட்டணி அரசு நிலைத்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றார். INDIA கூட்டணி எதிர்க்கட்சியாக பணியாற்றும் அளவிற்கு வளர்ந்துள்ளதாகவும், கூட்டணியின் வெற்றியைக் கொண்டாடுவதில் தவறில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

பள்ளிகளில் அறிமுகமாகும் 2 முக்கிய திட்டம்

image

தமிழகம் முழுவதும் ஜூன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. நடப்பு கல்வி ஆண்டு 220 நாள்கள் பள்ளிகள் செயல்படவுள்ளன. இதில் ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பும், 9 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பாட வேளையும் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் அதிகரிக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News June 9, 2024

கல்கி படத்தில் தீபிகாவின் தோற்றம் வெளியீடு

image

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் என பல உச்ச நட்சத்திரங்கள் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸின் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ள நிலையில், தீபிகா படுகோனின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தீபிகாவின் புதிய தோற்றம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

News June 9, 2024

எந்தெந்த சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்

image

நடப்பு கல்வியாண்டில் 19 சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 29, ஜூலை 13, ஆகஸ்ட் 10, 24, செப்.14, 21, அக். 5, 19, நவ.9, 23, டிச.14, 21 மற்றும் 2025இல் ஜன.11, பிப்ரவரி 1, 15, 22, மார்ச் 1,22, ஏப்.5 ஆகிய 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு அதிக விடுமுறை கிடைத்த நிலையில், வரும் கல்வியாண்டில் விடுமுறை குறைந்துள்ளது.

News June 9, 2024

கூட்டணி குறித்து விஜய் அறிவிப்பார்: புஸ்ஸி ஆனந்த்

image

தவெகவுடன் நாதக கூட்டணி அமைக்கும் எனக் கூறப்படும் நிலையில், இது குறித்து விஜய் அறிவிப்பார் என TVK பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். கூட்டணி குறித்தும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் விஜய்தான் முடிவு செய்வார் என்ற அவர், சட்டசபைத் தேர்தலுக்கு 2 ஆண்டுகள் இருப்பதால் அவசரம் வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், ஜூன் 18ல் TVK கூட்டம் நடத்த திட்டமிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்

News June 9, 2024

கர்நாடகாவுக்கு 4 அமைச்சர் பதவி

image

மத்திய அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் அமைச்சராக பதவியேற்க உள்ளனர். பாஜகவை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஷோபா, பிரகலாத ஜோஷி, ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்கிறார்கள். தமிழகத்தில் எல்.முருகன், உ.பி 9, ஆந்திரா 3, பிஹார் 8, மராட்டியம் 3 பேர் என அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அண்ணாமலை அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

News June 9, 2024

பிரதமர் பதவியேற்பு விழாவில் தேவகவுடா பங்கேற்கவில்லை

image

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.டி.எஸ். தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, உடல்நலக் குறைவு காரணமாக பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் JDS கட்சிக்கு இடம் வழங்கியதற்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ள அவர், மத்திய அரசில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

BREAKING: வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து விலகல்

image

ஒடிசா தேர்தலில் பிஜூ ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததற்கு நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் காரணம் என விமர்சனம் எழுந்த நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே அரசியலுக்கு வந்தேன்; பதவிக்காகவோ, பொறுப்புக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. பிஜூ ஜனதா தளம் தோல்வி அடைந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

விஜய்யுடன் நடிக்க விரும்பும் பாலிவுட் நடிகை

image

‘தி கோட்’ படத்தை தொடர்ந்து, ஒரு படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக விஜய் அறிவித்திருந்தார். இந்த சூழலில் விஜய்யுடன் நடிக்க விரும்புவதாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் லைகர் படத்திலும் நடித்துள்ளார் அனன்யா. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விஜய்யுடன் நடிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.

News June 9, 2024

மாநிலத் தலைவராக தொடரும் அண்ணாமலை

image

பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் எல்.முருகன், நிர்மலா உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்ற நிலையில், அண்ணாமலை பங்கேற்கவில்லை. இதனால், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தான் தமிழக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளதால், அவரே மாநிலத் தலைவராக தொடருவார். இதன் மூலம், அடுத்த மாநிலத் தலைவர் யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!