News June 9, 2024

மத்திய இணை அமைச்சர் (3/3)

image

தனிப் பொறுப்பில்லாத இணை அமைச்சர்கள், தத்தமது துறையின் கேபினட் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். இவர்களை ‘அதிகாரம் இல்லாத அமைச்சர்கள்’ என்று அரசியல் வட்டங்களில் கூறுவதுண்டு. சில மூத்த அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்புகளை அளித்து நன்றாகத் தயார் செய்வதும் உண்டு. சில அமைச்சர்கள் அவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

News June 9, 2024

பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் அழுத்தம் தருவார்கள்

image

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். பாக்., அணி பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ளதாக கூறிய அவர், அமெரிக்காவில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தயாராவது கடினம் என்றார். பும்பா, சூர்ய குமார் யாதவ் பாக்., அணிக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனவும் கணித்துள்ளார்.

News June 9, 2024

இணையமைச்சர் பதவியை நிராகரித்தார் அஜித் பவார்

image

பாஜக வழங்க முன்வந்த இணையமைச்சர் பதவியை நிராகரிப்பதாக அஜித் பவார் அறிவித்துள்ளார். மகராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்புமுனை ஏற்பட்டு வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸின் பிரபுல் படேல் ஏற்கெனவே இருந்த கேபினட் பொறுப்பை கேட்டிருந்த நிலையில், அதனை கொடுக்காமல் இணையமைச்சர் பதவியை பாஜக கொடுத்ததால், அதனை அஜித் பவார் புறக்கணித்துள்ளார். பாஜக ஆட்சியமைக்காத சூழலில் கூட்டணியில் குழப்பம் எழுந்துள்ளது.

News June 9, 2024

நாடு முழுவதும் 7,193 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

image

2024 மக்களவைத் தேர்தலில் 7,193 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. பாஜகவில் 27 பேரும், காங்கிரஸ் கட்சியில் 26 பேரும் நாடு முழுவதும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரையில் நாம் தமிழர் 39 இடத்திலும், பாஜக 11, அதிமுக 7 இடங்களிலும் டெபாசிட்டை இழந்ததுள்ளன. தேசிய அளவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் 97% வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

News June 9, 2024

மக்களின் அன்பே மிகப்பெரிய சொத்து: வி.கே.பாண்டியன்

image

ஒடிசாவில் கால் வைத்த நாள் முதல் மக்கள் என் மீது பெரும் அன்பு செலுத்தினார்கள். இதுவே எனக்கு மிகப்பெரிய சொத்து என்று வி.கே.பாண்டியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நவீன் பட்நாயக்கிடம் நான் கற்றுக் கொண்டது எனது வாழ்நாள் முழுமைக்கும் பயன் தரும். ஒடிசாவின் சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக உழைத்தது பெரும் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் ஷங்கர்?

image

மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என 2 படங்களில் நடித்துவருகிறார் அஜித். இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இப்படங்களுக்கு அடுத்து, ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும், இதற்காக சமீபத்தில் அஜித் – ஷங்கர் சந்திப்பு நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News June 9, 2024

நல்ல சினிமாவை கொடுத்துக் கொண்டே இருப்பேன்: சூரி

image

சசிகுமார் மற்றும் சூரி நடித்த கருடன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்த சூழலில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சூரி, கருடன் திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், தொடர்ந்து நல்ல சினிமாவை மக்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் விடுதலை திரைப்படத்தின் 2ம் பாகம் விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

News June 9, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ( இரவு 7 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலையில் கவனமாக செல்லவும்.

News June 9, 2024

தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை: ஈவிகேஎஸ்

image

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்று விமர்சித்த அவர், நாடக நடிகரை போல நடை, உடை, பாவனையை மோடி காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். பாஜகவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

News June 9, 2024

வயநாடு மக்களுக்கு ராகுல் துரோகம்: ஆனி ராஜா

image

வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வது அத்தொகுதி மக்களுக்கு செய்யும் துரோகம் என ராகுலை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சியின் ஆனி ராஜா தெரிவித்துள்ளார். 2 தொகுதிகளில் போட்டியிடுகிறேன் என ராகுல் முன்கூட்டியே வயநாடு மக்களிடம் ஏன் கூறவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வயநாடு தொகுதியில், ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஆனி ராஜா, 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

error: Content is protected !!