India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் 282 நிமிடங்கள் UPI வேலை செய்யாத நிலையில், இனி இதுபோன்ற இடையூறு இருக்கக் கூடாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டிப்பு காட்டியுள்ளார். டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை செயலாளர், RBI, NPCI அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் பேசிய அமைச்சர், அடுத்த 3 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 100 கோடி UPI பரிவர்த்தனைகள் நடக்க நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளார்.
மே தினம், வார விடுமுறையையொட்டி 2,119 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு நாளை 565 பஸ்களும், வெள்ளி, சனிக்கிழமை 375 பஸ்களும் இயக்கப்படவுள்ளது. கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 100 பஸ்களும், கோவை, திருப்பூர், ஈரோட்டுக்கு 250 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 715 பஸ்களும் இயக்கப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடமாநிலத்தவர் வருகை அதிகரித்து வருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, கண்காணிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் வேல்முருகன் MLA கோரிக்கை விடுத்தார். அதற்கு, ID கார்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டிரம்ப் அந்நாட்டு மக்களுக்கு பல ஆஃபர்களை வழங்கியுள்ளார். அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா மாறினால், மக்களின் வரிச் சுமை வெகுவாக குறையும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். உங்கள் வரிகளை பாதியாக குறைக்க போகும் நபரை தேர்ந்தெடுங்கள் என தெரிவித்துள்ள அவர் US-யுடன் இணைந்தால் மக்களுக்கு பல இலவசங்கள் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
காலையில் விழிப்பதே நிறைய பேருக்கு பிரச்னை. அப்படி விழித்து தியானம் செய்தால் பல நன்மைகள் கிடைக்குமாம். மன அழுத்தத்தை குறைத்து பதட்டத்தை கட்டுப்படுத்த தியானம் உதவுகிறது. விழிப்புணர்வு திறனை மேம்படுத்தி, கவனத்தை அதிகப்படுத்துகிறது. நினைவக இழப்பின் அபாயத்தை தியானம் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT
2020 – 21-ம் நிதியாண்டில் தங்க பத்திர திட்டத்தில் (SGB) முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே அவற்றை திரும்பப் பெறலாம் என RBI அறிவித்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கு 1 யூனிட் (அ) 1 கிராம் தங்கத்திற்கு ₹9,600 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டவை. ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த உடனே அதனை விற்று பணமாக்கும் வாய்ப்பை RBI தற்போது அறிவித்துள்ளது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று SA மகளிர் அணியை IND மகளிர் அணி எதிர்கொள்கிறது. SL-க்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்றைய போட்டியிலும் அதை தொடரும் முனைப்பில் இந்திய மகளிர் படை உள்ளது. காலை 10 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது. முன்னதாக, SA மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என்ற நிலையில் இந்தியா ஒயிட்வாஷ் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
அட்சய திருதியை நாளை (ஏப்.29) மாலை 5:31-க்கு தொடங்கி ஏப்.30-ம் தேதி பிற்பகல் 2:12-க்கு நிறைவடையும். இந்த நாளில் தானம் செய்வது, பொருள் வாங்குவது, வழிபாடு உள்ளிட்ட செயல்களை மேற்கொள்வது நற்பலன்கள் தரும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்குவது மங்களகரமான தொடக்கமாக கருதப்பட்டாலும், நவதானியங்கள், மண்குடம், பித்தளை-செம்பு பாத்திரங்கள், மஞ்சள், புத்தகங்கள், உப்பு போன்றவற்றையும் வாங்கலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் மே 4-ம் தேதி வரை மழை நீடிக்கும் என IMD அறிவித்துள்ளது. இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் 30 – 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தான் தனது இதயம் இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என வேண்டிக் கொள்வதாகவும், சாதி, மதம் என இந்தியர்களுக்குள்ளேயே நாம் சண்டையிட்டுக் கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சாதி, மதங்களையும் மதித்து ஒற்றுமையான, அமைதியான சமூகமாக நாம் வாழ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.