India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சபாநாயகர் இல்லாதபோது, அவையில் நடக்கும் விவாதங்களை தலைமையேற்று நடத்தும் அதிகாரம் அவருக்கு உண்டு. வாக்கெடுப்பில், அவையில் இரு தரப்புக்கும் சமமான வாக்குகள் இருக்கும் பொழுது, தனது சிறப்பு வாக்குரிமையை அவர் பயன்படுத்த முடியும். சபையின் இணை தலைமைப் பேச்சாளராக இருந்து, சபை நடவடிக்கைகளில் இறுதி முடிவெடுக்கும் சபாநாயகருடன் விவாதிக்கும் அரசியல் சாசன ரீதியிலான அதிகாரம் துணை சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்களவை செயலகத்தின் துணைத் தலைவராக கருதப்படும் துணை சபாநாயகர் என்பவர் கேபினட் அமைச்சருக்கு நிகரான அதிகாரத்தை உடையவர். மக்களவையில் சபாநாயகருக்கு அடுத்த 2ஆவது மிக உயர்ந்த நிலையில் அவர் இருப்பார். நாடாளுமன்ற மரபுப்படி, துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சியே வைத்துள்ளது. அவையின் துணைப் பொறுப்பாளராகவும் பிரதிநிதியாகவும் திகழும் அவர் மீது, சபாநாயகரால்கூட சிறப்புரிமை & அதிகாரம் செலுத்த முடியாது.
மக்களவைத் தேர்தலில் 73 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 13% மட்டுமே. கடந்த தேர்தலில் 78 பெண்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், இம்முறை அந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துள்ளது. 33% இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை பெருமையாக பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், அவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவது கவலை அளிக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள முப்பெரும் விழாவின் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளது. கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறவிருந்த இவ்விழா, கொடிசியா மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், 14ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சி 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது.
2022 ஆஸ்கர் விருது விழாவில் தனது மனைவியை கிண்டல் செய்ததற்காக, நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தார். இது குறித்து அப்போது பதிவிட்ட கங்கனா ரனாவத், தனது தாய் அல்லது சகோதரியை இழிவுப்படுத்தியிருந்தால், தானும் வில் ஸ்மித் போல அறைந்திருப்பேன் என கூறியிருந்தார். தற்போது, கங்கனா ரனாவத்தை பெண் CISF கான்ஸ்டபிள் ஒருவர் அறைந்த நிலையில், இந்த பதிவு வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 113/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால், டி20 வரலாற்றில் மிகக்குறைந்த ரன்களை வைத்து இந்திய அணி வெற்றி பெற்றது இதுவே முதல்முறை ஆகும்.
பாலைக் காய்ச்சி, அதைத் திரியச் செய்து பனீர் தயாரிப்போம். அதில் மிச்சமாகும் நீர்தான் வே புரோட்டீன் (Whey Protein Milk). அதில் புரதச்சத்து உள்ளிட்ட பல சத்துகளும் உள்ளதால், ஆரோக்கியத்துக்கும் நல்லது. பக்க விளைவுகள் என்று பெரிதாக எதுவும் இல்லை என்பதால் வெயிட்லாஸ் டயட்டில் இருப்பவர்கள், தசைகளை வளர்க்க நினைப்பவர்கள் இதனை வீட்டிலேயே தயார் செய்து, அளவாக பருகலாம் என்று ஊட்டச்சத்து ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து (32) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டிமாக், கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி, மூத்த வீரர் சந்தேஷ் ஜின்கான் ஆகியோருடன் குர்பிரீத் சிங்கும் தங்களது கேப்டன்ஷிப் குழுவில் ஒருவராக இருந்ததாகவும், தற்போதைய சூழலில் அவர் அணியின் பொறுப்பை ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் இலவசமாக திருத்தம் செய்து, புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய ₹50 கட்டணமாக வசூலிக்கப்படும். https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP மூலம் பழைய விவரங்களை திருத்தலாம். அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்வது கட்டாயம்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 147.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான நிலம் எடையார்பாக்கம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகளை 30 நாள்களுக்குள் மக்கள் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வளத்தூர், தண்டலூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
Sorry, no posts matched your criteria.