News June 10, 2024

சென்னையில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை

image

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அடுத்த ஓராண்டிற்குள் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்பட உள்ளதாக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) தெரிவித்துள்ளது. இந்த ‘ஏர் டாக்ஸி’ சேவையானது முதலில் சென்னையில் கொண்டுவரப்பட்டு பின்னர், மற்ற நகரங்களுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போயிங் உள்ளிட்ட வான் போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு இச்சேவையை வழங்க உள்ளது.

News June 10, 2024

காதலனை கரம் பிடிக்கிறார் ஸ்ரீகோபிகா

image

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அன்பே வா’ சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவிற்கும், அவரது காதலர் வைசாக் ரவிக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ஸ்ரீகோபிகாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீகோபிகா, சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார். பின்பு ’90ML’ திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.

News June 10, 2024

2 ஆயிரம் எருமைகளைத் தத்தெடுத்த ஆவின்

image

தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எருமைகளை தத்தெடுக்க ₹8.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து 2 ஆயிரம் எருமை கன்றுகளை தத்தெடுத்துள்ளது ஆவின் நிறுவனம். தமிழகத்தில் எருமைகளின் எண்ணிக்கை குறைந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News June 10, 2024

துணை சபாநாயகராக அதிக முறை இருந்தவர்கள் யார்?

image

அதிமுகவை சேர்ந்த தம்பித்துரை (1985-1989 & 2014-2019) இருமுறை (9 ஆண்டுகள் 229 நாள்கள்) துணை சபாநாயகராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்ததாக, APHLC கட்சியைச் சேர்ந்த ஜிஜி ஸ்வெல் 6 ஆண்டுகள், 315 நாள்கள் துணை சபாநாயகராக இருந்துள்ளார். காங்கிரஸின் ஹுகம் சிங் (5 ஆண்டுகள்), பாஜகவின் கரியா முண்டா (4 ஆண்டுகள்), சிரோமணி அகாலி தளத்தின் சி.எஸ். அத்வால் (4 ஆண்டுகள்)துணை சபாநாயகராக இருந்துள்ளனர்.

News June 10, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹160 சரிந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹53,040க்கும், கிராமுக்கு ₹20 குறைந்து ₹6,630க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ₹96.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News June 10, 2024

சிம்புவின் அம்மா, அப்பாதான் பிரச்னை: பாண்டிராஜ்

image

தான் இயக்கிய ஹீரோக்களுடன் தற்போது வரை நட்பில் இருப்பதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் ஏற்பட்ட பிரச்னை குறித்து பேசிய அவர், சிம்புவால் தனக்கு பிரச்னை இல்லை என்றும், அவரது அப்பா, அம்மாவால்தான் பிரச்னை வந்ததாகவும் கூறியுள்ளார். சிம்பு படப்பிடிப்பிற்கு லேட்டாகத்தான் வந்ததாகவும், ஆனாலும், குறைந்த நேரத்தில் நடித்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

தடகளத்தில் தங்கம் வென்ற சஞ்ஜிவானி ஜாதவ்

image

சர்வதேச தடகள போட்டியில், இந்திய வீராங்கனை சஞ்ஜிவானி ஜாதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் போர்ட்லாண்டில் நடந்த மகளிருக்கான 10,000 மீ., ஓட்டத்தின் தனி நபர் பிரிவில் கலந்துகொண்ட சஞ்ஜிவானி, பந்தய தூரத்தை 32 நிமிடம் 22.77 வினாடிகளில் கடந்து, முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், கடந்த ஆண்டு நடந்த போட்டியில் 2ஆவது இடம் பிடித்திருந்தார்.

News June 10, 2024

2 கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார் விஜய்

image

10, +2 பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக விஜய் பரிசுகளை வழங்க உள்ளதாக தவெக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை திருவான்மியூரில் ஜூன் 28இல் நடக்க உள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக ஜூலை 3இல் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால், இம்முறை 2 கட்டங்களாக மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.

News June 10, 2024

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பறந்த உத்தரவு?

image

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்றிருந்தாலும், கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைந்திருப்பதால் திமுக தலைமை அப்செட்டில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நிர்வாகிகளுடன் இணக்கமாக இல்லாத அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பாளரகளை மாற்ற தலைமை முடிவெடுத்துள்ளதாம்.

News June 10, 2024

அடுத்த 100 நாள்கள்… அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

image

மீண்டும் ஆட்சி அமைத்ததும், உடனடியாக 100 நாள்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை தேர்தலுக்கு முன்பே பாஜக தயாரித்திருந்தது. தற்போது தேர்தல் முடிந்து, பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ள நிலையில், அதை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் தலைமையில் இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!